கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேவையில்லாத கண்டிப்புக்கள் மற்றும் கடுமையான தோரணைகள் ஒருபோதும் உதவியளிக்காது. எந்தவொரு தீர்வும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், அது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கு பெரும்பான்மையான மக்களை எம்முடன் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(“கடும் நிலைப்பாடுகளால் அரிய சந்தர்ப்பத்தை பாழடித்துவிடாதீர்கள் – சம்பந்தன்” தொடர்ந்து வாசிக்க…)