இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு நகர் என்பது மிகவும் வேகமாக கொரோனா வைரஸ் பரவ கூடிய இடமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன், அவசியமற்ற இடங்களுக்கு செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு மரநடுகை

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருக்கோவில் பிரதேச கிளையின் ஏற்பாட்டில், சாகாமம் குளக்கரையில் மருத மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

‘அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் தவறாக வழிநடத்த முயன்ற ரஷ்யா’

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நட்புறவாளர்கள், அவரது நிர்வாகத்தின் மூலம் கடந்தாண்டு ஐ. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவிருந்த ஜோ பைடனுக்கெதிராக, பிரசாரத்தின்போது தவறாக வழிநடத்தும் குற்றச்சாட்டுகளை, ரஷ்ய அரசாங்கம் விதைக்க முயன்றதாக, ஐ. அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தான்சானிய ஜனாதிபதி கொவிட் தொற்றால் பலி

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபலி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய அவர் உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்து துணை ஜனாதிபதி சமியா சுலுஹ ஹாசன் அறிவித்துள்ளார்.

டக்ளஸை சந்திக்க விருப்பம் இல்லை

ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில், அவரை ஒருபோதும் தாம் சந்திக்கப் போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி, அவரை சந்திக்க விருப்பம் இல்லையெனவும் கூறினார்.

அனைத்து ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார்.

பஸ்-ரயில் விபத்து: சந்தேகநபர்களுக்கு மறியல்

தலைமன்னார் – பியர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம் தனியார் பஸ், ரயில் மோதி ஏற்பட்ட விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.

’அரசாங்கம் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை’

“மாகாண சபை தேர்தலை இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை” என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.