யாழ் – சென்னை விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 351 பேர் இன்று(11) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 83,561 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன், தொற்றுக்குள்ளான மேலும் 2,609 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம்’

மஸ்கெலியா, சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், நேற்று (10) பிணையில் விடுதலை செய்யப்பட்டமைக்கு, தொழிலாளர்களின் ஒற்றுமையே காரணம் என, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.

200க்கும் குறைவான பாடசாலைகள் மூடப்படும்

200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்படும் நிலை காணப்படுவதாக, தேசிய காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர்களின் செயல்திறத்தைப் போன்று பௌதிக மற்றும் மனித வளம் தொடர்பில் நிலவும் முறன்பாடுகள் இதற்கு காரணமாகும் என்று அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘தோல்நிற கரிசனைகளால் மகனை இளவரசாக்க மறுத்த அரச குடும்பத்தினர்’

தனது மகனின் தோலானது எவ்வளவு கறுப்பாக இருக்கும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களால், தனது மகன் ஆர்ச்சியை இளவரசராக்க பிரித்தானிய அரச குடும்பம் மறுத்ததாக, இளவரசர் ஹரியின் மனைவி மேர்கன் மார்க்கிள் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் – திருமா கையெழுத்து; திமுக-விசிக தொகுதி உடன்பாடு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள கூறியதும், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொண்டதும் இழுபறிக்கு காரணமானது.

மலையகத்தில் புதியக் கட்சிகள்?

வெளிநாடுகளின் நிதி அனுசரணையில், மலையகத்தில் புதியக் கட்சிகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 204 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,  இலங்கையில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 84,430 ஆக உயர்ந்துள்ளது.

இளைஞர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு

நுவரெலியா மாட்டத்தில் இளைஞர்களிடையே போதைப் பொருள், மதுபாவனை அதிகரித்துவருவதால் இளம் வயதினரின் இறப்பு வீதம் அதிகரித்துவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய பிள்ளைகளினதும் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில், கிணற்றுக்குள் வீசப்பட்ட மற்றைய இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள், இன்று (04) காலை மீட்கப்பட்டது.