’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’

எதிர்வரும் காலத்தில், வடக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் நான்கு வருட நிறைவை எட்டியது

வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியது.

நாட்டை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்றும் சில மணிநேரத்துக்குள் இலங்கையை வந்தடையவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.

இலங்கை: கொரனா நிலவரம்

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் இன்று(23) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75,842 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாள் மேயரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் முன்னாள் மேயர்

அரசியல் நோக்கம் கொண்ட ஆதாரமற்று குற்றச்சாட்டுகளை, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சாட்டுகிறாரென, முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு இணங்கியதன்

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 254 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299ஆக அதிகரித்துள்ளது.

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அலஸ்தோட்டம் பாலர் பாடசாலை

அலஸ்தோட்டம் மாயனவீதியில் அமைந்துள்ள பாலர்பாடசாலையின் முன்பாக அமைந்திருந்த மதிலும் வடிகானும் கடந்த மாரிகாலத்தின் போது இடிந்து வீழ்ந்து காணப்பட்டது. இதனை பெற்றோரும், ஆசிரியரும் எமது கவனத்திற் கொண்டுவந்ததையடுத்து சென்று பார்வையிட்டு தலைவர் அவர்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதனை தலைவரும் வந்து பார்வையிட்டு பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி உடனடியாக தற்காலிக வடிகான் வேலையை ஆரம்பித்துவைத்தார். விரைவில் மதில் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கௌரவ உறுப்பினர்களான பஹார்தீன், பாபுகாந், பாலகனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விடுமுறைதினத்திலும் மக்களுக்காக பணி செய்யும் JCB இயக்குனர், சாரதிகள், தொழிலாளர்கள், மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.