இலங்கை – இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

“இலங்கை இந்தியா இடையேயான தரைப் பாலத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை”

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை, விஜயம் செய்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் இலங்கை வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைப்பு செய்தல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.

சுன்னாகம் நீர் மாசு, பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளருக்கும் மல்லாகம் நீதவானால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.. 2014 ஆம் ஆண்டு உடுவில் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரேதச வைத்திய அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுன்னாகம் பகுதியில் உள்ள மின் நிலையத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு மல்லாகம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டார்! – ஐ நா செயற்குழு

விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ஜ் சட்ட விதிகளுக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் 5 நீதிபதிகள் சில மணிநேரங்களுக்கு முன் இன்று (பெப்ரவரி 5 2016) அறிவித்து உள்ளது. யூலியன் அசான்ஜ் இன் சுயாதீன நடமாட்டத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. யூலியன் அசான்ஜ் யை அமெரிக்கா உட்பட பிரித்தானியா சுவீடன் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்க முற்பட்ட போது 2012 ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள எக்குடோரியன் உயர்ஸ்தானிகர் இல்லத்தில் யூலியன் அசான்ஜ் தஞ்சமடைந்தார். தற்போது ஐநா வின் சட்டத்துக்கு புறம்பான தடுத்து வைப்பு;புகள் தொடர்பான செயற்குழு பிரித்தானியாவும் சுவீடனும் யூலியன் அசான்ஜ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

(“விக்கிலீக்ஸ் நிறுவனர் சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டார்! – ஐ நா செயற்குழு” தொடர்ந்து வாசிக்க…)

அரசின் உள்ளிருந்து முணுமுணுக்கும் பேரினவாதம்!?

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை ஓர் தூரநோக்கற்ற செயலாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சி நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

(“அரசின் உள்ளிருந்து முணுமுணுக்கும் பேரினவாதம்!?” தொடர்ந்து வாசிக்க…)

வைர அட்டியல் புகழ் சுஷ்மா இன்று ரணிலை சந்தித்தார்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்தார். பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட தூதுக் குழுவினரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது இருநாட்டு உறவுகள், மீனவர் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாக தெரியவருகிறது. மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்த சுஷ்மாவுக்கு மகிந்த ராசபக்ச பெறுமதி வாய்ந்த வைர அட்டியல் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். ஆனால் இம்முறை ரணில் எந்த அன்பளிப்பையும் வழங்கவில்லை என தெரியவருகிறது. (தினக்கதிர்)

வவுனியா, முல்லைத்தீவில் கறுப்புக் கொடி போராட்டம்

வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமான இன்று, முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை பத்துமணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

வழமையாக பறக்கும் ரஷ்ய விமானத்திற்கு துருக்கி மறுப்பு

ரஷ்யாவின் வழக்கமான இராணுவ கண்காணிப்பு விமானம் ஒன்றுக்கு தனது வான்பகுதியால் பறப்பதற்கு அனுமதி வழங்க துருக்கு மறுத்துள்ளது. இது ஒரு அபாயகரமான செயல்முறை என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரிய எல்லையில் வைத்து கடந்த நவம்பர் 24 ஆம் திகதி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டுவீழ்த்தியது தொடக்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றின்படி இரு நாடுகளின் கண்காணிப்பு விமானங்களுக்கு வான் பகுதியை திறந்துவிட ஒப்புக்கொண்டிருந்தபோதும் துருக்கி ஊடாக ரஷ்ய விமானம் பறப்பதையே அது நிராகரித்துள்ளது. உடன்பாடு எட்டபடவில்லை என்றும் விமானம் பயணிக்க முடியாது என்றும் துருக்கி வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. துருக்கி, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாடு கடந்த 2006 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்ததோடு அது தொடக்கம் ஆண்டுதோறும் சராசரியாக ரஷ்யாவின் இரு கண்காணிப்பு விமானங்கள் துருக்கி வானூடாக பறந்தன.

எங்களிடம் நீங்கள் அரசியல் கற்கும் நிலை!

முஸ்லிங்கள் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலைக் கற்றவர்கள் இதனை நான் மறுக்க வில்லை நிலைமைமாறி தற்போது முஸ்லிங்களிடமிருந்து தமிழர்கள்அரசியல் கற்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. காரணம் வீர வசனங்களைப் பேசுவதனால் எதனையும் சாதிக்க முடியாது. தற்போது முஸ்லிம் கிராமங்கள் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றமடைந்துள்ளது. காரணம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்துடன் கைகோர்த்து பல அமைச்சுப்பதவியினை பொறுப்பேற்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் வாதிகளில் சிலர் வீர வசனங்களை உரைக்கின்றனர். இதனால் கிடைப்பது ஒன்றுமே இல்லை, வெறுமனே தனித்து நின்று சிறுபான்மை இனத்தவர் எதனையும் பெற முடியாது. இவ்வாறு தெரிவித்தார் கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமிர்அலி.

(“எங்களிடம் நீங்கள் அரசியல் கற்கும் நிலை!” தொடர்ந்து வாசிக்க…)

க.அருளம்பலம்(ஆசிரியர்) அவர்களின் 29வது வருட நினைவு நாள்

 

கணபதிப்பிள்ளை-அருளம்பலம் அவர்கள் மட்டக்களப்பின் தெற்கே பெரியகல்லாறு எனும் இடத்தில் 29.08.1930 இல் பிறந்தார்.
சிறந்த தழிழ் ஆசிரியரான இவர். இலங்கையின் பல இடங்களில் ஆசியரிராகப் பணியாற்றியுள்ளார். குறிப்பாக மிகவும் பின்தங்கிய இடங்களைத் தேர்வு செய்து தனது பணியை ஆற்றினார். பின்தங்கிய பகுதிகளைத்தேர்வு செய்து அவர்களுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் அவரிடம் காணப்பட்டது.அதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதாக என்னிடம் எனது தந்தை கூறி இருக்கிறார்.தற்போது நானும் அதை உணர்கிறேன்.

(“க.அருளம்பலம்(ஆசிரியர்) அவர்களின் 29வது வருட நினைவு நாள்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்

புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக ‘சமூக சீராக்கல் இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் 86/17 டன்பார் விதியில் அமைந்துள்ள லைசியம் எக்கடமி மண்டபத்தில் (விஜித்தா திரை அரங்கிற்கு அருகாமையில்) எதிர்வரும் 06.02.2016 (சனிக்கிழமை) அன்று மு.ப. 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. யோசனைகள் அடங்கிய உத்தேச வரைவு சமப்பிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும். சட்ட வல்லுனர்களையும் சமூக, அரசியல் ஆர்வலர்களையும் ‘சமூக சீராக்கல் இயக்கம்’ அன்புடன் அழைக்கிறது.

தொடர்புகளுக்கு: 077 – 5265304 (கமல்), 071 – 6275459 (விஜய்)