சுதந்திரத்தை கொண்டாடுவோம்


பிரிதானியாவிடம் இருந்து விடுதலை கிடைத்த சுதந்திரத்தை

பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற இன்றைய தினத்தை இலங்கையராக நாம் கொண்டாடுகின்றோம்.

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார். சினிமாவில் சண்டைப் பயிற்சி கலைஞராகவும் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார்.

கடும் பிற்போக்குச் சிந்தனைகளை விதைத்த மிகச் சரியான நாள்

இலங்கைத் திருநாட்டின் 73ஆவது சுதந்திர தினம், ‘வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு’ எனும் தொனிப்பொருளில் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன.

யாழ். பல்கலையிலும் கரிநாள் பிரகடனம்

தடைகளை மீறி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நான், சிங்கள-பௌத்த தலைவன்’ – கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

’தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்’

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

’ஐ.நா அறிக்கையை நிராகரிக்க இலங்கை தீர்மானம்’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சர் உதய கம்மன்பில, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

7ஆம் திகதி சென்னை வருகிறார் சசிகலா

கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

’பொத்துவில் முதல் பொலிகண்டிக்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்கவும்’

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிள்ளையான், கருணா, இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.