ஜனாதிபதி, பிரதமரை அதிரடியாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் அதிர்ச்சி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

தனிச் சிங்களச் சட்டத்தின் மீது பொன்.கந்தையா ஆற்றிய உரை

சில தமிழ் இனவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் செய்யவில்லை என்று அன்றும் இன்றும் கூறி வரலாற்றைத் திரித்து வருகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஸ்யாவில் லெனின் தலைமையில் அமைந்த முதல் சோசலிச அரசுதான் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு முதன்முதலாக சுயநிர்ணய உரிமை வழங்கியது. அதன் பின்னரே சுயநிர்ணயம் என்ற சொல் அகராதியில் இடம் பெற்றது என்றுகூடத் துணிந்து கூறலாம்.

இலங்கையில் 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசு நாட்டின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன.

அப்பொழுது அந்தச் சட்ட மூலம் சம்பந்தமான விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன்.கந்தையா அவர்கள் நிகழ்த்திய உரையின் சில முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

இது கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு உதாரணம் மட்டுமே.“இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது கருத்து நோக்கு நான் ஒரு தமிழனாக இருக்கிறேன் என்ற உண்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகிறேன்.

எனது கடந்த காலத்தினையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கிறது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும்.எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது.

எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியைப் பிரயோகிக்கக்கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக்கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கிறீர்கள்.

நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதில் பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புத்தான் எமது கட்சி.

சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும் விரக்தியிலும் அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, சமூக ரீதியான எல்லா மட்டங்களிலும் அவர்களது உரிமைகளுக்காக இது போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக எமது கட்சி போராடுகின்றது.எமது அரசியற் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினரான நாங்கள் முழுப் பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பியோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி செய்யவும் இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். மற்றெந்த மொழிக் குழுக்களையும் விட, எந்த மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது.”

மறைந்த கடாபியின் மறுபக்கம்!

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறுகின்ற வரை தனக்கோ, தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

முதலில் கொவிட்-19 கண்டுபிடிக்கப்பட இடத்தில் சுகாதார ஸ்தாபனம்

கொவிட்-19-இன் ஆரம்பங்கள் தொடர்பாக விசாரணை செய்கின்ற உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான நிபுணர்கள் அணியொன்று, ஆரம்பத்தில் கொவிட்-19 கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுஹானிலுள்ள தற்போது மூடப்பட்டுள்ள மொத்த கடலுணவுச் சந்தைக்கு விஜயம் செய்துள்ளது.

மியான்மாரில் அவசர நிலை அமுல்

மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது. இதனால், அந்நாட்டில் மீண்டும் இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.

முல்லைத்தீவில் பெரமுனவின் ஆண்டு விழா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர், யுவதிகள் மாநாடும் முல்லைத்தீவு தொகுதிக்கான சம்மேளனக் கூட்டமும், முல்லைத்தீவு நகர பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றுள்ளது.

கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமரின் உறுதிமொழி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார். கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று(01) முற்பகல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

348 பேருக்குக் கொரோனா

பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 348 பேருக்குக் இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது.

பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.