16 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அஙகிகாரம்  வழங்கியுள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

மீண்டும் வருகிறார் சசிகலா

ஜனவரி, 27ஆம் திகதி காலை 10 மணியளவில், சசிகலா விடுதலை செய்யப்படுவார் என, கர்நாடகா சிறைத்துறை, உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் ஜோ பைடன் பதவி ஏற்கிறார்

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று(20) பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகரை அழகுபடுத்தல்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை

திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள், நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நகர சபையின் தவிசாளர் நாகராஜா இராசநாயகம், திருகோணமலை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், வீதியோரத்தில் நடைபெறும் வியாபாரங்களை நிறுத்தும் வேலைதிட்டம், இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

‘அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்’

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஹட்டனில் ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் கொரோனா

ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் 4 மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் மாணவருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஐவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்குத்தானே பொதுமன்னிப்பளிக்கிறாரா ட்ரம்ப்?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இதுவரையில் தனக்குத்தானே பொதுமன்னிப்பளிப்பதை தெரிவுசெய்யவில்லை என இது தொடர்பாக அறிந்த தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

அமைதியின்மையை அடக்க இராணுவத்தை தரையிறக்கிய துனீஷியா

நாள் கணக்கான சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு உதவுவதற்காக இராணுவப் பிரிவுகளை துனீஷியா தரையிறக்கியுள்ளது.

‘இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது’

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.