ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும்.

‘பைடனிடம் முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படும்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனாதிபதியாக இம்மாதம் 20ஆம் திகதி பதவியேற்கும்போது முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 522 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. மேற்படி தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் முழுமையாக முடக்கம்

உக்ரைன் நாட்டில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த முடக்கம் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை கல்லூரியை கையகப்படுத்த நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை, தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தரையாடி கையகப்படுத்தவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார். அத்துடன், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அவர் கூறினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1,000 ரூபாய் பறந்தது: பிரதிநிதிகள் கப்சிப்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி, முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று (7) தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலானது தோல்வியில் முடிவடைந்ததென, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும். நேற்று, பைடனின் வெற்றி உறுதிசெய்யப்படுவதை எதிர்த்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலகமாக உருவெடுத்தது. பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டன

கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று(06) அதிகாலை 05 மணிமுதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கண்டி − பூஜாபிட்டிய பகுதியிலுள்ள பமுனுகம மற்றும் தினவத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரத்தினபுரி − எஹலியகொட பொலிஸ் பிரிவின் மொலகல்ல பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை

டில்லியில் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40நாள்களைக் கடந்து கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

வெளிநாட்டு விடுமுறைகளால் பணிகளை இழக்கும் அரசியல்வாதிகள்

கொவிட்-19 பரவலின்போது தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறான அரசாங்க அதிகாரிகளின் வலியுறுத்தல்களுக்கு மத்தியில், கிறிஸ்மஸ் விடுமுறைகளின்போது சர்வதேச ரீதியில் பயணித்த எட்டுக் கனேடிய அரசியல்வாதிகள் நேற்று இராஜினாமா செய்துள்ளனர் அல்லது பதவிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.