காத்தான்குடி தனிமைப்படுத்தல் மீண்டும் நீடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

ரஞ்சன் எம்.பி குடியுரிமையை இழப்பார்

நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை, குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) தீர்ப்பளித்தது.

பொங்கல், துக்ளக் விழாக்களில் பங்கேற்கிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். பாஜக சார்பில் நடக்கும் பொங்கல் விழாவிலும், ‘துக்ளக்’ ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

பிள்ளையான் விடுதலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு–நாளை இறுதி தீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

மீள இயங்கவுள்ள ரயில் சேவைகள்

கொவிட் 19 பரவலையடுத்து தற்காலிகாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை, நாளை (12) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 36 ரயில் சேவைகள் நாளை முதல் மீள சேவையில் ஈடுபடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தகர்க்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல், அதே இடத்தில் சற்றுமுன் நாட்டப்பட்டது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு சம்மதித்தனர். உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை இன்று (11) அதிகாலை 3 மணியளவில் சந்தித்த சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.

மலையக தியாககிகள் தினம் அனுஷ்டிப்பு

‘மலையக உரிமைக்குரல்’ மற்றும் ‘பிடிதளராதே’ ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ‘மலையக தியாகிகள் தினம்’, கொட்டகலை பத்தனை சந்தியில், இன்று (10) உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நினைவுத்தூபி விவகாரம்: ’துணைவேந்தரிடம் ஆதாரம் உள்ளது’

மேலிடத்தின் உத்தரவிலேய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதெனவும். அதற்காக ஆதாரமுள்ளது எனவும் இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாதாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அழைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.