’இனவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ – திருமா

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தில் கலந்துகொள்பவர்களை கலைந்து செல்லுமாறும், மீறுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் அறிவித்தனர். எனினும், நான்கு மாணவர்கள் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்துக்குள் உள்ள நினைவுத் தூபி இன்று (08) இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும்.

‘பைடனிடம் முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படும்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனாதிபதியாக இம்மாதம் 20ஆம் திகதி பதவியேற்கும்போது முறையான விதத்தில் ஆட்சி கையளிக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா

கொவிட் 19 தொற்றுக்குள்ளான 522 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. மேற்படி தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் முழுமையாக முடக்கம்

உக்ரைன் நாட்டில் நாடளாவிய ரீதியிலான முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுக்கும் வகையிலேயே இந்த முடக்கம் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை கல்லூரியை கையகப்படுத்த நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது, வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியை, தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினருடன் கலந்தரையாடி கையகப்படுத்தவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்தார். அத்துடன், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, யாழ் மாவட்டத்தில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அவர் கூறினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1,000 ரூபாய் பறந்தது: பிரதிநிதிகள் கப்சிப்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை1,000 ரூபாயாக அதிகரிக்கக் கோரி, முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று (7) தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலானது தோல்வியில் முடிவடைந்ததென, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும். நேற்று, பைடனின் வெற்றி உறுதிசெய்யப்படுவதை எதிர்த்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலகமாக உருவெடுத்தது. பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.