வீதிகளில் குப்பை; மார்கழி கோலமிட்டுத் தடுப்பு

சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தால் ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம்

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மூன்றாம் காலாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா இன்று வெளியேறியது. அந்தவகையில், இரண்டுக்குமிடையிலான 48 ஆண்டு கால இணைப்பு முடிவுக்கு வந்திருந்தது.

சீனா சினோபார்முக்கு முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்து அனுமதி

சீன அரச ஆதரவிலான பாரிய மருந்துற்பத்தி நிறுவனமான சினோபார்மின் பிரிவொன்றால் உருவாக்கப்பட்ட கொவிட்-19 தடுபுமருந்தொன்றுக்கு சீனா இன்று அனுமதியளித்துள்ளது. குறித்த தடுப்புமருந்தின் தொழிற்படு திறனானது பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்காதபோதும், இடைக்காலத் தரவின் அடிப்படையில் கொவிட்-19-ஐ கொண்டிருப்பதை குறித்த தடுப்புமருந்தானது 79.34 சதவீதம் தடுப்பதாக இதன் உற்பத்தியாளர் நேற்று தெரிவித்திருந்தது. இந்த தடுப்புமருந்தை இம்மாதம் முதலில் ஐ. அரபு அமீரகம் அனுப்பியிருந்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடா வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

கனடா வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், “கனடா வரும் வெளிநாட்டினர் 72 மணி நேரத்துக்கு முன்னர் பெறப்பட்ட கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது

மீண்டும் கந்தளாய் சீனி

கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையின் பணிகள் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

கேகாலை மாவட்டத்தில், இதுவரை 1,007 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 4,583 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தெஹியோவிட்டயில் மாத்திரம் 326 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி முடக்கம்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹாவில் பரவும் கொரோனா

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம், 190 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

காவாலிகளின் கைகளில் தமிழ்த் தேசியம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பொதுத் தேர்தலில் இருவர் பெற்றுக் கொண்ட அமோக வெற்றிகள், தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியது. அதோடு, எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கின்றது.