சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

டில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தின விழாவில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காத நிலையில், தலைமையகத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கட்சிக் கொடியேற்றி னார்.

21 வயது மாணவி மேயராக பதவியேற்பு

திருவனந்தபுரம் மாநகர மேயராக 21 வயதான, பிஎஸ்சி கணிதவியல் மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வென்றன. மற்றவர்கள் 5 இடங்களில் வென்றனர்.

உதவிக்காக 12 மணித்தியாலங்கள் நடந்ததையடுத்து காப்பற்றப்பட்டனர்

அவுஸ்திரேலியாவில் தந்தையொருவரும், அவரது 10 வயதான மகனும் அவர்களுடன் பயணித்த மூவர் உதவிக்காக 12 மணித்தியாலங்கள் நடந்ததைத் தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளனர். வட மேற்கு குயிஸ்லாந்தினூடாக நேற்று முன்தினம் செல்லும்போது இவர்களின் காரானது வெள்ள வீதிகளில் சிக்கியுள்ளது.

ஐன் இஸாவிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

துருக்கி ஆதரவளிக்கும் சிரிய தேசிய இராணுவத்துக்கும், குர்திஷ்களால் தலைமை தாங்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளுக்குமிடையிலான மோதல்கள் இம்மாத நடுப்படுதியிலிருந்து அதிகரித்துள்ளன.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை

கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இரு கிராமங்கள் முற்றாக மூழ்கின

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாதளவுக்கு அவை வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.

204 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

உக்ரைனில் இருந்து மேலும் 204 சுற்றுலா பயணிகள் இன்று(29) மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் நேற்று நாட்டுக்கு வருகைதந்திருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல ஆகிய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு

கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவர்கள் ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கடைசி உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.