ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்

விடுதலையியை நோக்கி பயணிப்பதற்கு பெளதீக வளங்களை இலட்சியமாக கொண்டு இருக்காது, ஜனநாயக போராட்டங்களின் மூலம் விடுதலையினை நோக்கி பயணிக்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சேகுவேராவின் நினைவு தின நிகழ்வு யாழ். ரிம்பர் மண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணம் போரினாலும் முதலாளித்துவ மற்றும் இனவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் முழுமையாக கிடைக்கவில்லை. சேகுவேரா இன ஒடுக்குமுறைக்காக போராடியவர்.

(“ஜனநாயக போராட்டங்கள் மூலம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ

அரசியற் கைதிகளின் பிரச்சினையை சட்டப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யுமாறு, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(08) கோரியது. குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கரித்து கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் – த.தே.கூ” தொடர்ந்து வாசிக்க…)

பரராஜசிங்கம் படுகொலை, இருவர் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை(06) கைது செய்யப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகள் கொழும்பில் இடம் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லைக்கா, லிபாறா முதலாளி அல்லிராஜா

பிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்?) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரிட்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)

ISIS அமைப்பில்:இலங்கையர் 7 பேர் உள்ளனர்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் சுமார் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அத்தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து உயிரிழந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது இராணுவத்தினரால் விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதுடன் 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந் தார்.

(“4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 வருட சிறை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் அமைச்சர் ஜனகவுக்கு விளக்கமறியல்

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (06) கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.

சூத்திரதாரி பிரபாகரன் தான்

யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

(“தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டு உள்ள போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடப்பட்டு உள்ளார். விடுதலைப் புலிகளின் ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றுக்கு புலி முக்கியஸ்தர் ஒருவரின் நெருக்கமான உறவினரும், அப்போது பாடசாலை அதிபருமான இவர் உதவி, ஒத்தாசை வழங்கினார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர் அதிபராக இருந்து வந்த பாடசாலையின் மாணவர்களை இவரே புலிகளுக்கு காட்டிக் கொடுத்து வந்தார் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இவரின் காட்டிக் கொடுப்புகளுக்கு பயந்து பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர் என்றும் இதில் உள்ளது. (“மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)