விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள்

இலங்கை விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை செலுத்துவதற்கான உத்தியோகப்பூர்வ சின்னம் இன்று (13) அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சீன விரிகுடாவில் முகாமில் நடத்தப்பட்ட நிகழ்வின் போதே இந்த சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளது.

டயனாவின் கட்சி உறுப்புரிமை இரத்து

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த, நடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

கொரோனா மரணம் அதிரடியாய் கூடியது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 58ஆக இன்று (15) அதிகரித்துள்ளது. இன்றையதினம் மட்டும் ஐவர், மரணமடைந்துள்ளனர். அந்த வகையில், கொழும்பு 13 – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர், நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

’இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது’

(க. அகரன்)

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுவதாக,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.வவுனியாவில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிஹார் தேர்தல் பாஜக வெற்றி

பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சித் தொண்டர்பகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பொலிவியாக்குள் மீள நுழைந்த இவா மொராலெஸ்

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸ் கடந்தாண்டு இறுதி முதலிருந்த ஆர்ஜென்டீனாவிலிருந்து எல்லையைக் கடந்து நேற்று மீண்டும் பொலிவியாவுக்குச் சென்றுள்ளார்.

செட்டிக்குளம் பிரதே சபையை மீட்க தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா – செட்டிக்குளம் பிரதேச சபையை மீட்க தமிழ்த்; தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா என்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன அதிகாரிகள், இந்தியர்களுக்கு கொழும்பில் கொரோனா

இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.

இலங்கை: 15 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

நாட்டில் மேலும் 309 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தக் கொரோனா
தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் – கோட்டாபய ராஜபக்ஷ

எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக மக்களின் ஒத்துழைப்பே தேவை மக்களை தெளிவுபடுத்துவது ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும்சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் கடமையாகும் என்றார்.