கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது: என்ஐஏ நடவடிக்கை

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவரும், தேடப்பட்டு வரும் நபரான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரையும் தேசிய விசாரணை முகமை (என்ஐ) இன்று கைது செய்தது.

ஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று: அபிஷேக் பச்சன் தகவல்

தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாகப் படகு மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இருவர் உள்ளிட்ட நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்.தொண்டமானாறு வடக்குக் கடற்பகுதியில் வைத்​தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாடு நிறுத்தம்….பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, முதலீட்டு ஊடக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மொட்டின் தேர்தல் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சகல பிரசார நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன ​பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, 13,14,15 ஆம் திகதிகளில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

‘ஐக்கிய அமெரிக்கா வெளியேறுகிறது’

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி ஐக்கிய அமெரிக்கா வெளியேறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது.

24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ்: “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை குரங்கு பன்றிகளின் அட்டகாசம் யாழ் குடா நாட்டில்

யாழ் குடாவினில் காட்டுப் பன்றிகள், குரங்குகளின் தாக்குதல்கள் நீண்ட காலமாக இருந்துவரும்போதும், அண்மைக்காலத்தில் சிறுத்தைகள் வளர்ப்பு மிருகங்களைத் தாக்கும் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளன.