தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.

வூஹானில் கடைசி நோயாளியும் குணமடைந்தார்

முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில், சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததாக சீனாவின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கு பரிசோதனை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தோருக்கான கொரோனா பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்றன.

கோப்பாயில் பொலிஸார் குவிப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏதாவது ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு, பொலிஸார் ரோந்து நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் அந்த இடத்தில் எந்தவொரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.

ஜிம்பாப்வேயில் இருமுனைத் தாக்குதல்

ஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.

இது US Hotal, Jaffna இன் பதிவு

உணவிற்காக தவிக்கும் கஷ்டப்பட்ட மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சமைத்த உணவை (மதிய உணவு மாத்திரம் )வழங்க நாம் தயாராக உள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு மனிதாபிமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்

தமிழகம், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழு: உள்துறை அமைச்சகம் அனுப்பியது


தமிழகம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய 4 மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இலங்கையில் தொற்றாளர்கள் 368

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியவர்களெனவும், 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டல் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

அரிசிக்கு நிறமூட்டம்; ஒருவருக்கு அபராதம்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் அரிசிக்கு சிகப்பு நிறமூட்டம் செய்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியிருந்தவேளை கைதுசெய்யப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளருக்கு நீதிமன்றால் நேற்று (22) இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.