ஐபிஎல் அலசல்: இமேஜை ‘சரி’ செய்வாரா பாண்டியா?

நடப்பு ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் திகதி தொடங்கியது. எப்போதும் போலவே ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மீது ரசிகர்களின் கவனம் அதிகம் உள்ளது. அதேநேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் வைக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு கல்லடி, கசையடி தண்டனை மீண்டும் அமல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு  மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்  தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

“ஜூலியனுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது”

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார்.

தனி நபரின் மாதாந்த வாழ்க்கை செலவு அதிகரிப்பு

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு சராசரியாக 17,014 ரூபாயாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

19,620 இலங்கையர்கள் நாடு திரும்ப இதுதான் சரியான நேரம்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் வழங்கியுள்ளது.

தமிழக கடற்தொழிலாளர்கள் மூவருக்கு சிறை

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 36 தமிழக கடற்தொழிலாளர்ககளில் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 33 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை

பொதுபல சேனா பொதுச் செயலாளர் குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா-இலங்கைக்கு இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (26) சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

ராஜிவ் காந்தி கொலை: மூவருக்கு கடவுச்சீட்டு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.