எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்

‘மனிதன்’ என்று சொல்லவே இழிவாக இருக்கிறது. மனிதம் செத்துவிட்டது எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கு நீதி வேண்டி கண்டனக் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள்vபாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடு’ என்று கூறியுள்ளார். ஆனால், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பிரியங்காவைத் தொடர்பு கொண்டபோது, அவருடைய போன் `ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியுள்ளது தெரியவந்திருக்கிறது.

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் : பிரதமர்

சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற சம்பவங்கள் இடம்பறுவதற்கு இடமளிக்கமுடியாது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வாக்குமூலம் அளிக்காமல் இருப்பதால் விசாரணைகளை தொடரமுடியாமல் இருக்கின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

தமிழகத்தின் பிரபாகரன் சீமான்…???

சீமானிடம் ஆயுதம் இருந்திருந்தால் இங்கும் இலங்கையில் நடந்த அதே சகோதர அழித்தொழிப்பு முதலில் நடத்தப்பட்டு அன்பான சர்வாதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

வவுனியாவில் 510 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதிவரையும் 510 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 13.09.2019 அன்றிலிருந்தே உள்ளூர் தொற்றுக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் பருவ மழையினால் மேலும் டெங்கு நுளம்புகள் பெருக்கெடுக்கும் அபாய நிலை காணப்படுகின்றது.

தூதரக பணியாளருக்கு கொழும்பில் நடந்தது என்ன? சுவிஸ் தூதரகம் உத்தியோகபூர்வ அறிக்கை

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் தனது பணியாளர் கடத்தப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019 நவம்பர் 25 ம் திகதி தூதரகத்தின் இலங்கை பணியாளர் தொடர்பில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்றதாக தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூதரக பணியாளர் பலவந்தமாக கொழும்பு வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டார், காரில் ஏறுமாறு மிரட்டப்பட்டார்,அதன் பின்னர் இனந்தெரியாத நபர்களால் கடுமையான அச்சுறுத்தப்பட்டதுடன் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு மிரட்டப்பட்டார் என தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் பரவுகின்றன,என தெரிவித்துள்ள சுவிஸ் தூதரகம் பின்வரும் தெளிவுபடுத்தல்களை வெளியிட விரும்புவதாக என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகம் உடனடியாக உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை தாக்கல் செய்ததுடன் பொலிஸ் விசாரணைக்கு ஆதரவாகவும்,விசாரணையை ஆரம்பிப்பதற்காகவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர் தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை எனவும் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த அதிகாரியொருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் மறுத்துவிட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன, அவ்வாறான வேண்டுகோள் எவையும் விடுக்கப்படவில்லை எனவும் சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

‘இலங்கைக்கு நல்லிணக்க நடைமுறை தேவை’

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வழங்கத் தயார் எனவும், பிரதமர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அரசியலில் மைத்திரி நீடிப்பார்’

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலில் தொடர்ந்திருப்பார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்து, அரசியல் பணிகளை முன்னெடுப்பார் என்று, அக்கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். பெற்றுக்கொண்ட புதிய வெற்றியை, மேலும் அர்த்தப்படும் வகையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

துண்டு பிரசுரங்களுடன் பொகவந்தலாவையில் இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்த, மலையகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மீண்டும் இழுபறி

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27) மாலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.