மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்-கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி

மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கல்முனை போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீ.நிகால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுடன் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (6) காலை நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘இரத்தினபுரி மாவட்ட சிங்கள பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் அதிகம்’

இரத்தினபுரி மாவட்டத்தில், பெரும்பாலான தோட்ட மாணவர்கள், சிங்கள மொழி மூல பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்வி கற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பெல்மதுளை, இரத்தினபுரி, கலவான பகுதியிலுள்ள தோட்டத்துக்கு அணமையிலுள்ள பாடசாலைகளிலேயே, தமிழ் மாணவர்கள் அதிகம் கல்வி பயின்று வருகின்றனர்.

சந்திரயான் -2 : முன்னணி அயல்நாட்டு ஊடகங்கள் கூறுவது என்ன?

சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்ததையடுத்து பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.

நிலவின் தென் துருவ பகுதியில் மர்மம் 

பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் சுமார் 100 பில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படாத அநேக பள்ளங்களும், குகைகளும் இருக்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் சூரிய குடும்பத்தின் தோற்றம் குறித்து பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும். மேலும், அங்குள்ள பள்ளங்களில் உறைநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், அதிக ஆற்றல் வாய்ந்த ஹீலியம், ஹைட்ரஜன், மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

’பேச்சுவார்த்தை வெற்றிப்பெற்றால் வேட்பாளர் இல்லை’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் தனித்து வேட்பாளரை களமிறக்கும் சு.க.வின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார்.

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

வவுனியாவில் தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியின் தோழர்களுடனும் புத்திஜீவிகளுடனும் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற கலந்துரையாடல்

கொலம்பியத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் மதுரோ

கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலொன்றுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆயுதப் படைகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைகளின் (ஃபார்க்) முன்னாள் கொரில்லா தளபதிகள் குழுவொன்று ஆயுதந்தரித்ததற்கு மத்தியில் எல்லையில் இராணுவ ஒத்திகைகளை அறிவித்துள்ளார்.