போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????

அன்றைய தேர்தல் காலங்களில் தெருவெங்கும் ஒலித்தகோசம்.இப்போது மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தப் பாட்டு கோவில் உடுக்கு இசைபோல சகல தமிழனையும் கண்மண் தெரியாமல் ஆட வைக்கும். தமிழர்களை ஏமாற்றும் கலை அறிந்த கட்சி.இந்தக் கட்சியை தமிழர்களிடம் இருந்து அகற்றுவது சுலபமான காரியம் அல்ல.தமிழர்களிடம் அரசியல் செய்ய கொள்கைகள் எதுவும் தேவையில்லை. இனவாதம், மதவாதம், சாதிவாதம் இவைகளை இலகுவில் உள்வாங்கும் இனம் தமிழினம்.

(“போடு புள்ளடி வீட்டுக்கு நேரே…????” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில்

முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆலோசனையின் கீழ், T.ஸ்ரீதரன் தலைமையில் இயங்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி வடகிழக்கில் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலையில் சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தியது.

இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களுக்கும் இதுதான் நடக்கும் போல தெரியுது….

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
வீட்டுச் சின்னத்திற்கு புள்ளடி போடும்படி கேட்கிறார்கள்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அருந்தவபாலன் சயந்தனுக்கு ஹெல்மட்டால் அடித்தார்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவா
அஸ்மினும் ஜெயசேகரமும் சண்டை போடுகின்றனர்?

இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அவசரப்பட்தாலா
அம்பாறையில் தமிழரசு வேட்புமனு நிராகரிக்கப்பட்டது?

தன் வீடு கட்ட கருங்கல்லும் மாபிள் கல்லும் இறக்குமதி செய்த
மாவை சேனாதிராசா, இவர்களுக்கு ஒரு கட்டு ஓலையாவது வாங்கிக் கொடுப்பாரா?

காணாமல் போனவர்களின் உறவுகள் 300 நாட்களாக போராடுகின்றனர்

கேப்பாப்பிலவு மக்கள் 280 நாட்களாக போராடுகின்றனர்

அரசியல்கைதிகள் விடுதலை கோரி போராடி வருகின்றனர்.

இவர்களுடைய எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள்
ஊள்ளு+ராட்சி தேர்தலில் போட்டியிட முனைவது எதற்காக?

முன்னாள் போராளிகளுக்கு தலா 56 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர்கூட இந்த தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை?

ஏன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்கூட வாய் திறக்கவில்லை?

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!

இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு

அன்புடையீர் …!!!!!

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ”இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீட்டிற்கு உங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் ..

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத்தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இராதாமேதா அவர்கள் தலைமையிலும், எனது பாட்டி உலகம்மாள் மாரிமுத்து முன்னிலையிலும் இந்த புத்தகம் வெளியீடு காண்கிறது. இந்த சிறப்பு விழாவில் எனது அன்பு நண்பரும் அமைச்சருமான திரு.மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

இடம் : தபால் திணைக்கள கேட்போர் கூடம், டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, மருதானை, கொழும்பு 11 திகதி : 20.01.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4.30

இந்த நிகழ்வில் கிடைக்கும் நிதி, பின்தங்கிய பாடசாலைகளில் தண்ணீர் தாங்கி வழங்க பயன்படுத்துவதால் உங்கள் மனம்போல உதவுவீர்கள் என நம்புகிறேன். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன். என்றும் நட்புடன்

டன்ஸ்டன் மணி

ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள், அடக்குமுறையின் மோசமான விளைவுகளை அனுபவித்து வந்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில் அயலுறவுக் கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை; அவை நலன் சார்ந்தவை. இதைப் பலரும் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றனர். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

(“ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?

(நளினி ரத்னராஜா)
பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர். ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

(“இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு – அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்?” தொடர்ந்து வாசிக்க…)

பெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால்      முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்!

(ரி. தர்மேந்திரன்)

புதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது, எனவே முஸ்லிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்துதேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும்இல்லாவிட்டால் பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்ற மாய வார்த்தையில் இழக்க நேரிடும் என்று கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் பிரதி தலைவர் எச். ஏ. ஆலிப் சப்ரி சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“பெருந்தேசிய கட்சிகளின் முகவர்கள் வெற்றி பெற்றால்      முஸ்லிம் சமூகம் மீண்டும் உரிமைகளை இழக்க நேரும்!” தொடர்ந்து வாசிக்க…)

சித்தார்த்தன், சீ.வீ.கே.சிவஞானத்தின் விட்டுகொடுப்பும், சரவணபவன், அருந்தவபாலன், ஜெயசேகரனின் சின்னத்தனமும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு சர்ச்சை இன்னும் முழுமையான தீரவில்லை. யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வேட்பாளர் சிக்கல் நீடித்துவரும் நிலையில், சங்கானை பிரதேசசபையிலும் சர்ச்சை தோன்றியது. சங்கானை பிரதேசசபையின் முதல் இரண்டு வருடமும் புளொட்டும், அடுத்த இரண்டு வருடமும் தமிழரசுக்கட்சியும் என முடிவானது. இந்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி எம்.பி சரவணபவன் எதிர்த்தார். அவரது வட்டுக்கோட்டை தொகுதிக்குள் சங்கானை பகுதி வருவதால், புளொட் அங்கு நிர்வாகம் செய்வதை அவர் விரும்பவில்லை. அது தனது எதிர்கால தேர்தல் வெற்றிக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென நினைக்கிறார்.

(“சித்தார்த்தன், சீ.வீ.கே.சிவஞானத்தின் விட்டுகொடுப்பும், சரவணபவன், அருந்தவபாலன், ஜெயசேகரனின் சின்னத்தனமும்” தொடர்ந்து வாசிக்க…)

அதிசயம்.ஆனால் உண்மை, சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். எனவே இந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிக்கு நீதுமன்றம் காவல் துறை என்பன சாதகமாகவே இருக்கும்.ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதிசயமான ஒன்று. இந்த வழக்கின் குற்றவாளிகளை மேன் முறையீட்டின் மூலம் தப்பிக்க வழிபிறக்கலாம்.இந்திய நீதித்துறை அவ்வளவு பலவீனமானது.அது உறுதி செய்யப்பட்டால் இந்த நீதிபதிக்கும் கௌசல்யாவுக்கும் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.சாதிக்காக எவரையும் கொலை செய்வதை கௌரவரமாக கருதும் தேசம் இந்தியா.அதற்கான பலமான வரவேற்பும் அங்கே உண்டு. சங்கர் கொலை என்பது அறியாமையில் வாழும் சமூகம் அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இளவரசன் கொலை அரசியல் கட்சி,அரசியல்கள் சம்பந்தப்பட்டது.இங்கே குற்றவாளிகளை சட்டம் கண்டுகொள்ளவில்லை . கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடியது பாராட்டுக்கு உரியது.ஆனால் அந்தப் பெண்ணின் மன உழைச்சலை எங்களால் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு புறம் காதலனை பறிகொடுத்த கவலை.அதற்கான பழிவாங்கலாக இப்போது சமாதானமானாலும் நாட்கள் செல்ல தன் தந்தைக்காக கண்ணீர் விடும் நாளும் வரலாம். இன்று சில அமைப்புகள் கௌசல்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தமது நலன்களை கவனம் செலுத்துகிறார்கள்.வாழ்வை இழந்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக உள்ள அந்தப் பெண்ணிற்கு மீண்டும் வாழ வழி செய்தால் அதுவே பகுத்தறிவு.அதை விட்டு அவளுக்கு விளம்பரத்தை கொடுத்து அவளின் அறிவை உணர்வுகளை மழுங்கடிப்பது நல்ல விசயம் அல்ல. அவள் தனது பழைய நினைவுகளில், இருந்து வெளியே வர அவளுக்கு புதுவாழ்வு அவசியம்.பகுத்தறிவுவாதிகள் உதவுவார்களா என்பது சந்தேகமே. சாதியமைப்பு தகர்கப்பட வேண்டும்.அதற்காக எல்லோரும் போராடவும் மனங்கள் பக்குவபடவும் வேண்டும்.ஆனால் வாழ்க்கை எனறு வரும்போது கொஞ்சம் நிதானம் தேவை. மாற்றமடையாத இந்த சமூக ஊழல்களில் சாதி மாறி திருமணம் செய்வதை கொஞ்சம் யோசிக்கவேண்டும்.குறிப்பாக பெண்கள் தனியே காதலனை நம்பியே போகிறார்கள்.அந்த காதலன் இல்லாதபோது அவளின் நிலை என்னவாகும்.சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து விதவையானால் அந்தப் பெண்ணுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு இல்லை என்னும்போது சாதி மாறி திருமணம் செய்யும்போது யோசிப்பதே நல்லது. மனிதாபிமான உணர்வு இல்லாதவர்கள் காட்டும் அன்பு போலியானது.சாதி என்று வரும்போது பெற்ற மகளை மகனை கொல்லத் தூண்டுமானால் அவர்கள் காட்டிய அன்பு போலியானது.இங்கே மகளைவிட சாதி பெரிது என்றால் அந்த பாசம் வெறும் வேசமே. சங்கரின் கொலைக்கு கௌசல்யாவின் தந்தையைவிட அவரது சொந்தங்களும் சமூகமும் கொடுத்த மன உழைச்சல்களே சங்கரின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அந்த சமூகத்துக்கு எந்த சட்டம்,நீதிமன்றம் தண்டனை வழங்கும். இந்த கௌசல்யா இன்னொரு தலித் இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும்.ஆனால் கௌசல்யா போன்ற பெண்களை தலித் இளைஞர்களோ அல்லது வேறு எவரோ திருமணம் செய்ய தயாராக இல்லை.இதுவும் ஒரு வகை தீண்டாமையே.இளம் பெண்ணை விதவையாக வாழா வெட்டியாக சகல சமூகங்களுமே பார்க்கவிரும்புகிறது.அனைத்து சாதிகளும் குற்றவாளிகளாக தெரிகிறது.

சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். (“அதிசயம்.ஆனால் உண்மை, சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். எனவே இந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிக்கு நீதுமன்றம் காவல் துறை என்பன சாதகமாகவே இருக்கும்.ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதிசயமான ஒன்று. இந்த வழக்கின் குற்றவாளிகளை மேன் முறையீட்டின் மூலம் தப்பிக்க வழிபிறக்கலாம்.இந்திய நீதித்துறை அவ்வளவு பலவீனமானது.அது உறுதி செய்யப்பட்டால் இந்த நீதிபதிக்கும் கௌசல்யாவுக்கும் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.சாதிக்காக எவரையும் கொலை செய்வதை கௌரவரமாக கருதும் தேசம் இந்தியா.அதற்கான பலமான வரவேற்பும் அங்கே உண்டு. சங்கர் கொலை என்பது அறியாமையில் வாழும் சமூகம் அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இளவரசன் கொலை அரசியல் கட்சி,அரசியல்கள் சம்பந்தப்பட்டது.இங்கே குற்றவாளிகளை சட்டம் கண்டுகொள்ளவில்லை . கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடியது பாராட்டுக்கு உரியது.ஆனால் அந்தப் பெண்ணின் மன உழைச்சலை எங்களால் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு புறம் காதலனை பறிகொடுத்த கவலை.அதற்கான பழிவாங்கலாக இப்போது சமாதானமானாலும் நாட்கள் செல்ல தன் தந்தைக்காக கண்ணீர் விடும் நாளும் வரலாம். இன்று சில அமைப்புகள் கௌசல்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தமது நலன்களை கவனம் செலுத்துகிறார்கள்.வாழ்வை இழந்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக உள்ள அந்தப் பெண்ணிற்கு மீண்டும் வாழ வழி செய்தால் அதுவே பகுத்தறிவு.அதை விட்டு அவளுக்கு விளம்பரத்தை கொடுத்து அவளின் அறிவை உணர்வுகளை மழுங்கடிப்பது நல்ல விசயம் அல்ல. அவள் தனது பழைய நினைவுகளில், இருந்து வெளியே வர அவளுக்கு புதுவாழ்வு அவசியம்.பகுத்தறிவுவாதிகள் உதவுவார்களா என்பது சந்தேகமே. சாதியமைப்பு தகர்கப்பட வேண்டும்.அதற்காக எல்லோரும் போராடவும் மனங்கள் பக்குவபடவும் வேண்டும்.ஆனால் வாழ்க்கை எனறு வரும்போது கொஞ்சம் நிதானம் தேவை. மாற்றமடையாத இந்த சமூக ஊழல்களில் சாதி மாறி திருமணம் செய்வதை கொஞ்சம் யோசிக்கவேண்டும்.குறிப்பாக பெண்கள் தனியே காதலனை நம்பியே போகிறார்கள்.அந்த காதலன் இல்லாதபோது அவளின் நிலை என்னவாகும்.சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து விதவையானால் அந்தப் பெண்ணுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு இல்லை என்னும்போது சாதி மாறி திருமணம் செய்யும்போது யோசிப்பதே நல்லது. மனிதாபிமான உணர்வு இல்லாதவர்கள் காட்டும் அன்பு போலியானது.சாதி என்று வரும்போது பெற்ற மகளை மகனை கொல்லத் தூண்டுமானால் அவர்கள் காட்டிய அன்பு போலியானது.இங்கே மகளைவிட சாதி பெரிது என்றால் அந்த பாசம் வெறும் வேசமே. சங்கரின் கொலைக்கு கௌசல்யாவின் தந்தையைவிட அவரது சொந்தங்களும் சமூகமும் கொடுத்த மன உழைச்சல்களே சங்கரின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அந்த சமூகத்துக்கு எந்த சட்டம்,நீதிமன்றம் தண்டனை வழங்கும். இந்த கௌசல்யா இன்னொரு தலித் இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும்.ஆனால் கௌசல்யா போன்ற பெண்களை தலித் இளைஞர்களோ அல்லது வேறு எவரோ திருமணம் செய்ய தயாராக இல்லை.இதுவும் ஒரு வகை தீண்டாமையே.இளம் பெண்ணை விதவையாக வாழா வெட்டியாக சகல சமூகங்களுமே பார்க்கவிரும்புகிறது.அனைத்து சாதிகளும் குற்றவாளிகளாக தெரிகிறது.” தொடர்ந்து வாசிக்க…)