மே தினத்தில் வரதராஜப்பெருமாளின் கருத்து

நாடளாவிய ரீதியில், படையினர் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகள் மக்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் – வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

(காணொளியை பார்க்க….)

மேதினம்- அண்ணலின் அடிச்சுவட்டில்.

1800 களில் ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தை குறைக்கவேண்டுமென்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆஸ்திரேலிய, ஆசியத்தொழிலாளர்களிடமும் இது பரவியது. தொழிலாளர்கள் உற்பத்திக்கான கருவிகள் எனவே அவர்களுக்கு ஓய்வு முக்கியமல்ல என்பதையே கருத்தாய்க்கொண்டிருந்தது முதாலாளிச்சமூகம். சுமார் 18 மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொழிச்சாலைகளில் உழைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால், தொழிலாளர்கள் வேலை நேரத்தைக்குறைத்தே ஆக வேண்டும் என்று கடுமையாகப் போராடினார்கள். சிக்காக்கோவில் பெரும் போராட்டம் வெடித்தது. முக்கிய தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். மார்க்ஸ் இறந்த ஆறு ஆண்டுகள் கழித்து 1889, ஜூலை 14 அன்று பாரீஸ் நகரில் சர்வதேசியத் தொழிலாளர்களின் சர்வதேசிய தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது.இதில் 18 நாடுகளிலிலிருந்து 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஏங்கெல்ஸ் அதில் முக்கியமானவர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டுமணிநேரமாக ஆக்கவேண்டுமென்ற முழக்கத்தை1890 மே 1 அன்று அனைத்துலக தொழிலாளர்கள் இயக்கமாக முன்னெடுக்கவேண்டுமென்று அறைக்கூவல் விடப்பட்டது.அதுவே சர்வதேசிய தொழிலாளர்தினம் எனப்பட்டது.

ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு

(ச. சந்திரசேகர்)
இந்தியாவின் இரண்டாவது மாபெரும் விமான சேவைகள் வழங்குநராகத் திகழ்ந்த ஜெட் எயார்வேய்ஸ், தனது விமானச் சேவைகளை, கடந்த வியாழக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் முதல் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இந்த விமான சேவையில், தமது பயணங்களை ஏற்கெனவே பதிவு செய்திருந்த பயணிகள் இந்தச் சேவை இடைநிறுத்தம் காரணமாக பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இரக்கண்டியில் பல ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை – இரக்கண்டி பகுதியில் இன்று (27) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து, மோட்டார் சைக்கிளொன்றும் ஒவ்வொன்றும் 130 கிலோகிராம் எடையுடைய, வெடிகுண்டு குச்சிகள் 51, 27 அடியைக் கொண்ட பாதுகாப்புக் கம்பிகள், 215 டெட்டோனேட்டர்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ​கடற்படையினர் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரித்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போதே, இந்த வாள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் கவலையளிக்கிறது’

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ளது. எனினும், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதுவரையில், தீர்வு வழங்கப்படாமை கவலையளிக்கிறதென உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். உடன் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்.