மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….

மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பான உயிரிழை அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக (A9 வீதியில்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் 2018இற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா.2,00,000.00 ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையானது கடந்த 15.01.2019 தைப்பொங்கலன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. (“மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் – ராகவன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினார். கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

எங்கள் சர்வேஸ்வரி அம்மாவுக்கு அஞ்சலி -தோழர் சிறிதரன்

1980 களின் நடுப்பகுதியில் மறைந்த தோழர் அகிலனின் தாயார் சர்வேஸ்வரி பரமசாமி(86) மறைவு. 1983 இன வன்முறையின் போது இவரது கணவர் பரமசாமியும் மூத்த புதல்வரும் தெகிவளையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவரது இளைய மகன் தோழர் அகிலன் ஈழமாணவர் பொதுமன்றத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
1980 களின் நடுப்பகுதியில் வங்ககடலில் படகு விபத்தில் தோழர்களுடன் உயிர் நீத்தார். 1983 இன் பின்னர் அவர்கள் பேரிழப்பின் துயரத்துடன் சர்வேஸ்வரி அம்மா அகிலன் வாசுகி யாழ்ப்பாணம் உரும்பிராய் விட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் உரும்பிராய் வீடும் 1983 இற்கு பின்னான இருண்ட காலத்தில் சமூக விடுதலை இயக்கத்தை ஆதரித்த இடமாக இருந்தது. சர்வேஸ்வரி 1983 இல் இருந்து 35 ஆண்டுகள் சர்வேஸ்வரி பரமசாமி அம்மாவின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களுடனான பயணம் . அது ஒரு அவல சரித்திரம்.
அம்மாவிற்கு எமது அஞ்சலிகள்!தோழர்கள் வாசுகி ஆதவன் பிள்ளைகளுடன் துயர் பகிர்கிறோம்.

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)

இதேவேளை இந்த இராணுவத் தாக்குதல்களால் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புகள் மட்டுமல்லாமல் இராணுவக் கட்டமைப்பும் ஆட்டம் கண்டது. குறிப்பாகப் புலிகளின் வெடிபொருட் தொழிற்சாலைகள் இடப்பெயர்வுக்கும் குண்டுவீச்சுக்கும் இலக்காகின. புது மாத்தளன், அம்பலவன் பொக்களையில் ஏப்ரல் 19, 20ஆம் திகதிகளில் இராணுவமும் உள்நுழைந்தவுடன் மாறிய நிலைமைகள் புலிகளுக்கு மேலும் நெருக்கடிகளைக் கொடுத்தன. கடலில் தீவிரக் கண்காணிப்பு, சிறிய நிலப்பகுதி, வெளிச்செல்ல முடியாத அளவுக்குச் சுற்றிவளைப்புஇராணுவ வளையத்தின் இறுக்கம், தளர்வடைந்த தளபதிகள், எந்தப் போருபாயத்தாலும் இனி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலை நிச்சயமாகிவிட்டது. ஆனால், அப்போதும் தங்களால் போரில் வெற்றிபெற முடியும் என அவர்கள் சனங்களுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். புலிகளின் குரல் வானொலி போர் வெற்றி குறித்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகளையும் அறிவிப்புகளையும் செய்துகொண்டேயிருந்தது. ஆட்பிடிப்பும் குறைவில்லை. அதேவேளை புலிகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part14)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)

புலம்பெயர் மக்களின் போராட்டம் நிச்சயமாக ஏதாவது நல்விளைவுகளைத் தரும் என்று பிரபாகரன் நம்பினார். முதல் தடவையாக அவர் துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி இது. அதுவரையும் எப்படியும் இராணுவத்தை ஏதாவது ஒரு புள்ளியில் வைத்து முறியடித்துத் தோல்வியைத் தழுவச் செய்யலாம் என்று இருந்த நம்பிக்கையைப் பிரபாகரன் மெல்ல மெல்ல இழந்திருந்தார்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part13)” தொடர்ந்து வாசிக்க…)

பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT

ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் மாகாண சபையின் அதிகாரங்கள் பறிபோகாது ஜனாதிபதியும் ஆளுநரும் அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

– அ. வரதராஜா பெருமாள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இப்போது ஆளுநரின் தலைமையின் கீழ் மாகாண ஆட்சி நடைபெறுகிறது. இதனvaratha் அர்த்தம் மாகாண ஆட்சி முறை குலைந்து போனதாக அர்த்தமாகாது. இவ்வாறான காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியின் அதிகாரங்களைக் கையிலெடுத்து செயற்படும் எனக் கருதுவதும் தவறாகும். அவ்வாறான தவறான அர்த்தத்தில் மாகாண ஆட்சி முறையை கடந்த காலங்களில் கையாண்டதனாலேயே 13வது அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் மாகாண சபை முறை கொண்டிருந்த ஆட்சித் தத்துவங்களெல்லாம் காலப்போக்கில் கரைக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டன.

(“பத்திரிகைகளுக்காக வெளியிடப்படும் அறிக்கை – 13-11-2018 – SDPT” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’

கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார். கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.

(“‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தரின் “கரும்புலிகள்”

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருகாலத்தில் வன்னியில் பலநூற்றுக்கணக்கான கரும்புலிகளுடனும் – முப்படையினருடனும் – இருந்துகொண்டு தென்னிலங்கை தரப்பினரை எவ்வாறு தன் காலடியில் வைத்திருந்தாரோ, அதேயளவு பலத்துடன் தற்போது சம்பந்தன் காணப்படுகிறார். காலதேவன் மீண்டுமொருதடவை தமிழர் தரப்பின் குரலுக்கான அடையாளத்தை காணப்பித்திருக்கிறான். தென்னிலங்கை ஆட்சிக்கதிரையின் ஒருகால் அல்ல, இரண்டு கால்களாகவும் சம்பந்தன் இருந்துகொண்டிருக்கிறார் என்பதை தற்போதைய குழப்பங்கள் அடையாளம் காண்பித்திருக்கின்றன. இனி சம்பந்தர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் கேள்வி. இன்று சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்களின் ஆசிரியர் தலையங்கங்கள்வரை எல்லாமே, சம்பந்தர் பலமோடு இருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு சொல்வது மிக எளிதானதும்கூட. ஆனால், அவர் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதுதான் கடினம். அதனை எவருமே சொன்னதாக காணவில்லை. (“சம்பந்தரின் “கரும்புலிகள்”” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)” தொடர்ந்து வாசிக்க…)

புரட்சிகர இசை என்றாலே கத்தாரின் நினைவு வராமல் இருக்குமா?

நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து – காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கொண்டுவரும் ‘அரசியல் சாசனப் பாதுகாப்பு இயக்கத்துக்கு’ தமது முழு ஆதரவையும் வழங்கப் போவதாக உறுதியளித்தார். (“புரட்சிகர இசை என்றாலே கத்தாரின் நினைவு வராமல் இருக்குமா?” தொடர்ந்து வாசிக்க…)