தோழர் தியாகலிங்கம் மறைவு.

தியாகலிங்கம் மாஸ்டர்; என வட பகுதி பொது உடைமை தொழிற்சங்க இயக்க பாரம்பரியத்தில் நன்கு அறியப்பட்ட தோழர் தியாகலிங்கம் இலங்கையின் நீள அகலங்களில் ஆசிரியப்பணி ஆற்றியவர்.
1970களின் நடுப்பகுதியில் இருந்து அகில இலங்கை ஆசிரியர்; சங்கம், 1980களின் பிரபல தொழிற்சங்க கூட்டுக்குழு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வடபகுதி தொழிற்சங்க கூட்டுகுழு என்எல்எப்ரி பிஎல்எப்ரி என யாழ் மார்க்சிய படிப்பு வட்டம் என அவரது பொதுவாழ்வு பணி நீண்டது.

மறைந்த தோழர்கள் எச் என் பெர்னான்டோ -விசுவானந்த தேவன் வரை பலருடன் பணியாற்றயவர்;
இன்று மிச்சமீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உடைமை சமூக நீதி பிரக்ஞை கொண்ட மனிதர்களில் ஒருவராக வாழ்ந்தார்;.
வர்க்கம்- சமூகநீதி- தேசிய இனங்களின் உரிமைகள் -பால் சமத்துவம் என ஒரு பொதுவுடைமைவாதியின் பிரக்ஞைகளுடன் வாழ்ந்தவர். தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஜனநாயக இடைவெளி என பிரக்ஞை கொண்டிருந்தார்;. மிகவும் அபாயகரமான தருணங்களில் எல்லாம் தனது தோழர்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்தவர்.
அவர் கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 2 வருடங்களாக புற்று நோயின் தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறார். அதனை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக சமூக அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டவர்.
தோழர் தியாகலிங்கம் போன்ற மனிதர்கள் அருகிவிட்ட சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இடையறாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த சமூக பிரக்ஞை கொண்ட உள்ளம் ஓய்ந்து விட்டது.
அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்!
அன்னாரின் மனைவியார் பிள்ளைகள் மற்றும் உறவுகள் தோழர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்!!

விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்

(காரை துர்க்கா)
பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், ஏனைய இழப்புகள் தொடர்பான விவரங்களைத் திரட்டவுள்ளதாக, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவா, அ.இ.பாஜகவா?- ஸ்டாலின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

மத்திய அரசின் 370 சட்டப்பிரிவு ரத்தை ஆதரிப்பதால் அதிமுக என்ற பெயரை அகில இந்திய பாஜக என்று இனி மாற்றிக்கொள்ளலாம் என்ற ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த ஒன்றாகவும் உள்ளது. சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக் கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். இதனால் முடி பிரச்சினைகள் நீங்கும்.

விமானத்தில் பறந்த 120 முதியவர்கள்! – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை

‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது

‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும்.

“அதிகாரத்தின் அரூப கரங்கள்”

(கருணாகரன்)
கடந்த நூற்றாண்டில் நடந்த சம்பவங்கள் இவை. ஆனால் உங்கள் காலடியில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன. அப்பொழுது புலிகள் தனியரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தனிநாட்டுக்குப் பதிலாக மாகாணசபையைக் கொடுத்துச் சமாளிக்க முயன்ற இந்திய அரசை நிராகரித்த புலிகள், மாகாணசபையை வலுவாக்கம் செய்ய முயன்ற இந்திய அமைதிப்படை வெளியேறிய கையோடு இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதுவரையிலும் இந்திய அமைதிப்படையினால் காட்டில் முடக்கப்பட்டிருந்த புலிகள் கிசுகிசுவென ஊருக்குள் வந்தனர். புத்தம் புதிய சீருடைகளில் ஊருக்குள் வந்த புலிகளைக் கண்ட சனங்களுக்கு ஆச்சரியம்.

இதைக் கண்ட “மல்லிகை” ஆசிரியர் டொமினிக் ஜீவா, “ஏறக்குறைய ஒரு இராணுவ ஆட்சிதான் வரப்போகுது போலிருக்கு!” என்றார்.

“ஜீவா இப்படிச் சொல்கிறாரே!” என்றேன் கவிஞர் சு. வில்வரெத்தினத்திடம்.

“ஸ்டாலின் சகாப்தம் வரப்போகுதெண்டு ஜீவாவுக்குச் சொல்லு” என்றார் சு.வி. ஜீவா, ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு விளங்கக் கூடியதாக இப்படிச் சொன்னார் வில்வரெத்தினம்.

“ஸ்டாலின் ஆட்சி வரப்போகிறது போலிருக்கு” என்றேன் ஜீவாவிடம்.

“அதுக்கேற்ற கொள்கை இருக்க வேணுமே” என்றார் ஜீவா.

எப்படியோ தனியரசுக்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்யத் தொடங்கிய புலிகள், அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு துறைகளையும் ஆரம்பித்தனர். கல்வி, கலை பண்பாடு, நீதி, பொருளாதார அபிவிருத்தி, நிர்வாகம், விளையாட்டு, சமூக மேம்பாடு, பெண்கள் நலன், புனர்வாழ்வு, பொலிஸ், கூட்டுறவு இப்படிப் பல துறைகள்.

ஒவ்வொரு துறைக்குரிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு துறையும் ஏறக்குறைய ஒவ்வொரு அமைச்சுத்தான். ஒவ்வொரு பொறுப்பாளரும் ஏறக்குறைய அந்தத்துறைக்கான அமைச்சர்களே. அதிகாரம், ஆளணி, ஏனைய வளங்கள் அனைத்தும் அந்த அடிப்படையிலேயே கட்டமைப்பாக்கம் செய்யப்பட்டன.

தனியரசைப் பிரகடனப்படுத்துமாற்போலப் புலிகளின் பிரதேசமெங்கும் புலிக்கொடி பறந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியம் சுவாமி, “காட்டிலிருந்த புலிகளை ஊருக்குள் கொண்டு ஆட்சியிலேற்றி விட்டிருக்கிறது இலங்கை அரசு” என்று சொல்லிக் கவலைப்பட்டார்.

அது புலிகள் – பிரேமதாச தேனிலவுக் காலம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத திகில் படக் காட்சிகளைப்போல காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன.

இந்திய இராணுவம் வெளியேறிய கையோடு வடக்குக் கிழக்கு மாகாணசபை ஆளுநர் ஆட்சியின் கீழ் வந்தது. பேரளவில்தான் ஆளுநர் ஆட்சி. சபையின் கட்டுப்பாடு முற்று முழுதாகப் புலிகளின் வசம். எழுதாத ஒப்பந்தமாக மாகாணசபையைப் புலிகளிடம் கொடுத்திருந்தார் பிரேமதாசா. உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றவர்களை விட அதிக செல்வாக்கோடு மாகாணசபை நிர்வாகத்தைப் புலிகள் நடத்தத் தொடங்கினர். (வரதராஜப்பெருமாள் தலைமையிலான வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கு ஒத்துழைக்காத பிரேமதாச, புலிகளுக்குத் தாராளமாக உதவினார்)

இதைப்பற்றிப் பேசும்போது “மாகாணசபை நிர்வாகத்தில் பாதிப்பேருக்குமேல் புலிகளின் ஆட்களாகத்தானிருந்திருக்கிறார்கள் போலிருக்கு” என்று நினைவு கொள்கிறார் அப்போது மாகாணசபை உறுப்பினராக இருந்த எஸ்.எல்.எம். ஹனீபா.

ஆகவே புலிகளுக்கு எல்லாமே இலகுவானது.

அப்பொழுது மாகாணசபை நிர்வாகம் திருகோணமலையில் நடந்து கொண்டிருந்தது. புலிகள் திருகோணமலைக்குச் செல்லவில்லை. திருகோணமலை நிர்வாகத்தைத் தாங்கள் இருந்த இடத்துக்கு அழைத்து வழிப்படுத்தினர். இது கொழும்பிலிருந்த பலருக்கும் கசப்பை ஏற்படுத்தியது. நாட்டிலுள்ள ஏனைய ஏழு மாகாணசபைகளுக்கும் இல்லாத முக்கியத்துவத்தை வடக்குக் கிழக்கு மாகாணசபைக்குக்கொடுக்க வேண்டிய அவசியமென்ன? அதிலும் புலிகளுக்கு இணக்கமாக இந்தளவுக்கு விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய தேவை என்ன? என்ற கேள்விகள் பிரேமதாவைச் சூழ்ந்தது.

சிங்கக் கொடிக்குப் பதிலாகப் புலிக் கொடி பறப்பதைப் பற்றிச் சில சிங்களத் தலைவர்கள் பிரேமதாசவின் காதில் கிசுகிசுத்தனர். அவர்களுடைய காலில் அழுத்தி, பேசாதிருக்குமாறு கண்களால் ஜாடை காட்டினார் பிரேமதாசா.

இதையெல்லாம் சகிக்க முடியாத காமினி திசநாயக்க, “புலிகளுக்கு எல்லாவற்றையும் தாரை வார்த்துக் கொடுக்கப்போகிறீர்களா?” என்று சற்றுச் சூடாகக் கேட்டார்.

“அப்படியென்றால் புலிகளின் பகுதிக்குப் போய் நீங்கள் சிங்கக் கொடியைத் தாராளமாக ஏற்றுங்கள்” என்று பதிலடித்தார் பிரேமதாசா.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இந்தியா, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தது.

இப்படியே இந்தியாவையும் கொழும்பையும் கலக்கிக் கொண்டிருந்த புலிகள் பிரேமதாசவுடன் பேசுவதை 1990 மே இறுதியில் முடிவுக்குக் கொண்டு வந்தனர். பேச்சுகள் திடீரென முடிவுக்கு வருவதை பிரேமதாசா உள்ளுர உணர்ந்திருந்தாலும் அதை அவர் விரும்பவில்லை. எப்படியாவது தொடர்ந்தும் புலிகளோடு பேச வேண்டும் என்ற முனைப்போடேயிருந்தார். அதற்காக புலிகளுக்கு மேலும் இணக்கமான காரியங்களைச் செய்தார்.

பேச்சுவார்த்தையைப் புலிகள் முடிவுக்குக் கொண்டு வந்தபோது புலிகளின் ஒரு அணி கொழும்பிலே தங்கியிருந்தது. அது பேச்சுகளில் ஈடுபடும் புலிகளின் பிரதிநிதிகளுக்கு உதவியாகக் கொழும்பில் நின்ற அணி. அந்த அணியினர் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தனர். “எதற்கும் தயாராக இருங்கள்” என்று அவர்களுக்குக் கூறியது புலிகளின் தலைமை.

அடுத்த என்ன அறிவிப்பு வரும்? என்ன முடிவெடுப்பது என்று தெரியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த அணிக்கு இருந்தாற்போல ஒரு அறிவிப்புக் கிடைத்தது.

“ஒரு தொகை பணமும் ஆயுதமும் கிடைக்கும். அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டு வாருங்கள்” என.

“என்ன காசும் ஆயுதங்களும் கிடைக்குமா? அதை எடுத்துக் கொண்டு எப்பிடி வன்னிக்கு வருவதாம்?” கொழும்பில் நின்றவர்களுக்குப் பெருங்குழப்பம்.

மறுநாள் இதற்குரிய வழிமுறைகளும் வழியும் சொல்லப்பட்டது. அதன்படி அந்த அணிக்கு காசையும் ஆயுதங்களையும் கொடுத்து பயணத்துக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார் பிரேமதாசா.

அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமலிருந்தவர்களுக்கு பெருந்தொகை பணமும் ஆயுதமும் கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டு போவதற்கு வழியும் கிடைத்துள்ளது என்றால் எப்படியிருக்கும்! ஆயிரம் அதிர்ஸ்ட தேவதைகள் கூடி வந்து தங்கக் கிண்ணத்தில் அதிர்ஸ்டத்தை அள்ளிக் கொடுத்தது போன்றதல்லவா இது.

ஆயுதங்களோடும் பணத்தோடும் வந்த புலிகள் வன்னியிலுள்ள நித்திகைக்குளம் காட்டில் ஹெலிகொப்ரரில் இறங்கினர். வேடிக்கை என்னவென்றால் நித்திகைக்குளத்தில் புலிகளோடு இலங்கை அரசின் ஹெலிகள் இறங்கியபோது அரசுப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் முடிந்து வடக்குக் கிழக்குப் பகுதிகளெங்கும் சண்டை தொடங்கியிருந்தது.

அந்த நிலையிலும் தான் சொன்னதை மீறாமல் பிரேமதாசா நடந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமே. பிரேமதாசாவைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு இதுவும் ஒரு வாசல்.

பிரேமதாசாவுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமலிருந்தார் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம். அன்ரன் பாலசிங்கமே புலிகளின் அணிக்குத் தலைமை தாங்கிப் பிரேமதாசவுடன் பேச்சுக்களை நடத்தியவர். கொழும்பிலிருந்த புலிகளைப் பாதுகாப்பாக வன்னிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டிருந்ததும் பாலசிங்கமே.

தான் சொன்னதை மறுக்காமல் மதித்துச் செயற்பட்ட பிரேமதாசாவுக்கு எப்படிப் பதிலளிப்பது? மட்டுமல்ல, இந்திய அமைதிப்படையை திருப்பி அனுப்புவதற்கும் வடக்கு மாகாணசபையை புலிகள் கையாளுவதற்கும் கூட பிரேமதாசாவே காரணமாக இருந்தார். ஏறக்குறையப் புலிகளைப் பல மடங்கு பலப்படுத்தி, அவர்களுக்கான வழிகளையும் இலகுபடுத்திக் கொடுத்திருந்தார் பிரேமதாசா. இதை அவர் தன்னுடைய சகாக்களை மீறி, பெரும் சவால்களின் மத்தியிலேயே செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் என்ன பிராயச்சித்தம்? எப்படி நன்றிக்கடன் செலுத்துவது?

அரசியலில் இதற்கான வழிமுறைகளும் கணக்குகளும் வேறு என்பதை உணர்ந்து கொண்டார் பாலசிங்கம். தன்னுடைய அணுகுமுறை வேறு. பிரபாகரனின் நோக்கு வேறு என்பது மேலும் நிரூபணமாகியது. ஆனால் தன்னால் எதையும் செய்ய முடியாது என்பதைச் சூழ்நிலைகள் வலியுறுத்தின. பிரேமதாசாவுடன் மறுபடி பேசுவதற்கோ நன்றி சொல்வதற்கோ பாலசிங்கத்துக்கு வாய்ப்புகளிருக்கவில்லை. யுத்தம் எல்லாக் கதவுகளையும் மூடியது. ஆனாலும் பாலசிங்கத்துக்கு இதைக் குறித்த நெருடல் நீண்டகாலமாக இருந்து கொண்டேயிருந்தது.

ஒரு தடவை பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மன்னாரில் நடந்த சண்டையொன்றில் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பட்டியலிட்டிருந்தது ஈழநாதம் பத்திரிகை. அதைப் பார்த்த பாலசிங்கம் சிரித்துக் கொண்டு சொன்னார், “இப்பிடிக் கஸ்ரப்பட்டு சண்டைபிடிச்சு, ஒண்டொண்டா ஆயுதங்களைப் பொறுக்கியெடுத்துக் கணக்குப் பார்க்கிறதைப் பெரிசாகப் போடுறாங்கள். ஒரு சொல்லோட லொறிக்கணக்கில ஆயுதங்களைக் கொண்டு வந்து இறக்கினதைப்பற்றி ஒரு சொல் எழுத மாட்டாங்கள். அதுவும் பிரேமதாசாவைக் கொண்டு ஏத்திய ஆயுதம்” என.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவர் புரியாமல் நெற்றியைச் சுருக்கினார். “சண்டை பிடிச்சுத்தான் காரியத்தைச் சாதிக்க வேணுமெண்டில்லை. புத்தியாலையும் சிலதைச் செய்யலாம்!” என்றார் பாலசிங்கம்.

1993 மேதினத்தன்று பிரேமதாசா கொழும்பு ஆமர்வீதியில் கொல்லப்பட்டபோது பாலசிங்கம் என்ன நினைத்திருப்பார்? இதைப்பற்றி அடேலிடம்தான் கேட்க வேண்டும் என்கிறார் நண்பர் ஒருவர்.

இதைப்பற்றி மட்டுமல்ல, 1993 இல் புலிகளின் பிரதித்தலைவர் மாத்தயா (கோ.மகேந்திரராசா) புலிகளால் கைது செய்யப்பட்டபோது மிஷேல் ஃபூக்கோவை முன்னிறுத்தி “அதிகாரத்தின் அரூபகரங்கள்” பற்றி எழுதியதை, பேச்சுவார்த்தைகளின் போது என்னவெல்லாம் நடந்தன, பேச்சுகளுக்குப் பின்னே நடந்தது என்ன? முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதைப்பற்றி, யாழ்ப்பாண இடப்பெயர்வைப்பற்றி, அதற்குப் பின்னான வன்னி நிலவரத்தைப்பற்றி, இக்கட்டான சூழலில் வன்னியை விட்டு வெளியேறியதைப்பற்றி, பிறகு வன்னிக்கு வந்து இரணைமடுவில் நம்பிக்கையோடு இறங்கியதை, கருணாவின் வெளியேற்றம் பற்றி, 2006 இல் இன்னொரு இக்கட்டான சூழலில் வன்னியை விட்டுத்துக்கத்தோடு மீளவும் புறப்பட்டதைப்பற்றி, மீண்டும் யுத்தம் தொடங்கினால் அதுதான் இறுதி யுத்தமாக இருக்கும் என்பதைப்பற்றி…

இதைப்பற்றியெல்லாம் அடேல் பேசினால் நன்றாகத்தானிருக்கும்.

ஏராளம் உண்மைகளின் களஞ்சியமாக இந்த வரலாற்றில் அடேலிருக்கிறார். இந்த வரலாற்றுண்மைகளின் திறப்பு அடேலிடம் உண்டு. எப்பொழுது அந்தத்திறப்பின் மூலம் புதிய வாசல்களை அடேல் திறப்பார்?

00

நன்றி – எதிரொலி (ஜூன் 2019)

பெர்முடா முக்கோணம் பகுதியில்…..

பெர்முடா முக்கோணம் பகுதியில்
மர்மமான முறையில் –
விமானங்களும் கப்பல்களும்
காணாமல் போகின்றன என்று
உலகத்தோடு சேர்ந்து நாமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

தற்கொலையால் பிறரை கொல்லும் பயங்கரவாதிகள்

(Annesley Ratnasingham)
!!..தற்கொலைதாரிகளை எந்த ஒரு திட்டத்தாலும் நிறுத்தமுடியாது ஆனால் அவர்கள் சார்ந்த சமூகம் அதை முற்றாக வெளிப்படையாக நிராகரிக்கும்போது மட்டுமே அதை நிறுத்தலாம் ..
.
….தற்கொலைதாரிகளின் நடவடிக்கையால் அந்த சமூகத்துக்கு எந்த நன்மையையும் இல்லை , அந்த மதத்துக்கும் எந்த நன்மையையும் இல்லை என்பதை வெளிகாடட அந்த சமூகமே தெருவில் முழுமையாக இறங்கி போராடவேண்டும் …
.
……கடந்த உயிர்த்தநாள் மத அடிபடைகொண்ட பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் தமது அடையாளத்தை ஒழித்து அதை செய்யவில்லை ..!!
.
…………..அடுத்தது இவர்கள் நடத்திய தற்கொலை தாக்குதல்கள் ..தற்கொலை தாக்குதல்கள் இல்லாமேலேயே இதை செய்திருக்க முடியும் ….
…………………அப்போது எதற்கு அதை தற்கொலை தாக்குதலாக செய்தார்கள் என்ற கேள்வியை கேட்க்கும்போது பதில் கிடைக்கும் …
.
…அதாவது அவர்கள் ஒரு ராணுவ அணியையோ அல்லது ஒரு பாதுகாப்பு தர்ப்பையோ தற்கொலை தாக்குதல் செய்யவில்லை …
.
…………………ஒரு ராணுவ பாதுகாப்பு அரணுக்குள் நுழைவது கடினம் அதனால் அதை தற்கொலை தாக்குதலாக செய்யலாம் …
.
…ஆனால் இங்கு சாதாரண இடங்களில் தமது பொதியை கொண்டு சென்று அதை மேசைக்கு அடியில் தள்ளி விட்டு வெளியேறி இருக்கலாம் அல்லவா ???
.
….ஆகவே அவர்கள் அவர்களுடைய மக்களுக்கு இந்த செய்கையின்மூலம் வெளிப்படுத்தும் கருத்து அவர்களுடைய மதத்தில் சொல்லப்படவிடயங்களை நம்பிக்கை ஏற்படுத்துவதற்கே …
.
…ஆகவே அந்த மதத்தை சார்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை நிராகரிக்கும்போது அவர்கள் செய்யும் தற்கொலைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போதும் …
.
..ஆனால் அநேகர் அவர்களை முற்றாக நிராகரிப்பதாக இல்லை …( வெளிப்படையாக )
.
..அதன் காரணமும் மதமே …