“என்னை அடித்து கீழே தள்ளினார் வில்லியம்” – ஹாரி அதிர்ச்சித் தகவல்கள்

தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் திகதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டைகள் வருகின்றன

முட்டை இறக்குமதியின் முதல் கட்டமாக, ஒரு தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் தொகுதி அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 கைகொடுக்குமா?

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கை மக்கள் அரசியல், பொருளாளதார ரீதியில் மிகவும் கொந்தளிப்பான ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். பொருளாதார ரீதியில், இவ்வளவு கொந்தளிப்பான காலங்கள் இருந்துள்ளன. அதேபோல், அரசியல் ரீதியாக மிகவும் கொந்தளிப்பான வருடங்களும் இருந்துள்ளன. ஆனால், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்,  இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த ஒரு வருடம் இருந்ததா என்பது சந்தேகமே! இருந்தால் அது, 1953ஆம் ஆண்டாகத் தான் இருக்க வேண்டும். 

புதிய அதிபருக்கு பெற்றோர் எதிர்ப்பு

மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்பப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? 17க்கு முன்னர் பதில்

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ்மிரர்  ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது.

சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார்.

அண்ணாமலையால் பாதுகாப்பு இல்லை -காயத்ரி விலகல்

‘அண்ணாமலை தலைமையிலான தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக‘ நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி  ரகுராம் அறிவித்துள்ளார்.

யுவதியை நிர்வாணமாக 13 கி.மீ இழுத்துச் சென்ற கார்

டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை  நிர்வாண நிலையில் காரொன்று சுமார் 13 கிலோமீற்றர் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானுக்கான நிதி உதவியை நிறுத்தவுள்ள ஜேர்மனி

ஜேர்மனியின் இலாப நோக்கற்ற குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தி, அதைச் செய்த ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் நீண்ட பட்டியலில் இணைந்துள்ளதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.

“டொய்லெட் பேப்பர் கொண்டு வாருங்கள் “-டுவிட்டர் உத்தரவு

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமையகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.