இடுப்பை தொட்டவருக்கு குடை ​நெளிய தாக்குதல்

கடமைக்குச் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின்,  இடுப்பு பகுதியை தொட்டுவிட்டுச் சென்ற நபரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மிளகாய் செய்கையின் அறுவடை விழா

விவசாய திணைக்களத்தினால்  வழங்கப்பட்ட கலப்பின செத்தல் மிளகாய் செய்கையின் அறுவடை விழா பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட மட்டக்களப்பு பொறுகாமம் கிராமத்தில் இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

கடினமாகும் குடியேற்ற விதிகள்

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைகழகங்களில் கல்வி பயிலவும், அங்கேயே தங்கி பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றவும் பல நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் அங்கு செல்வது வழக்கம்.

’பறக்கும் ஹோட்டல்’

உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் தனித்துவமானவை. மலை, கடல், தனித்தீவு என வித்தியாசமான அனுபவங்களையும் பெரும் விதத்தில் இவை காணப்படுகின்றன.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் நிறுத்தம்

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில் பாதையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திருத்தப் பணிகளை 2024 ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவும் அதனை 6 மாத காலத்திற்குள் நிறைவு செய்யவும் எதிர்பார்த்திருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மோடி முதலிடம்

சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த மதிப்பாய்வு நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளவில் பிரபலமான தலைவர் என்ற பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 76% அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: ’சட்டப்பிரிவு 370 ரத்து’ செல்லும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ 2019 ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

“பிணைக்கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்”

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் யுத்தம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

சமூகமட்டத்தில் குறைந்திருக்கும் பாலியல் தொடர்பான அறிவு

எமது நாட்டில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தற்போதைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில், பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கான தேடல்களை  இருபாலரும் பன்னிரண்டு வயதின் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கின்றனர்.