’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

கோடாகோகமவைக் கண்டு அஞ்சுவோர் யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலிமுகத்திடலில் போராட்டங்கள் தொடங்கி ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அதன்மீது வன்முறை ஏவப்பட்டது. அதை மக்கள் எதிர்த்து வெற்றிகண்டு மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டி ஏரியூட்டப்பட்டு சிதைக்கப்பட்ட கோடாகோகமவை மீள உருவாக்கி வலுபடுத்தியிருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மீதான அரச வன்முறையைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் விரிவானதும் ஆழமானதுமான பார்வையை வேண்டுவன.

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 4)

அரசியல் அமைப்பு மாற்றம் மக்களுக்கான அரசியல் அமைப்பிற்கான ஆட்சி முறமையை மாற்றும் போராட்டமாக கொண்டு செல்வதற்கான பொறுப்பு எம் யாவருக்கும் உண்டு இதில்தான் நாம் வரலாற்று அனுபவங்களை நாம் பாடமாக கொள்ள வேண்டும்

எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 3)

பிரிதானியா காலத்தில் இருந்து சுதந்திரம் அதற்கு பின்னர் என்று இலங்கையில நாணய மதிப்பு இறங்கு முகமாக தொடர்ந்த நிலை 1977 78 காலத்தில் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் உள்ளுர் உற்பத்திகளை காலி செய்து இறக்குமதியில் அதிகம் தங்கியிருக்கும் செயற்பாடு என்று இலங்கையின் நாண மதிப்பு தொடர்ச்சியாக வீழ்;சியடைந்து. இது யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்பும் அதி வேகமாக வீழ்ச்சியடைந்து வந்தது.

ஆடைத் தொழிற்சாலை தாக்குதல்; ஏறாவூரில் போராட்டம்

ஏறாவூர், புன்னைக்குடா வீதியை அண்டி அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழில்சாலைப் பணியாளர்கள் சுமார் 500 பேர், இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மூன்று ஆடைத் தொழில்சாலைகளும் கடந்த செவ்வாய்க்கிழமை (10) வன்முறைக் கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு கை ஆதரவு கொடுக்குமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) காலை கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

சஜித்திடமிருந்து பாய்வோர் ரணில் அணியினராம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதுடன், அது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

’ரணிலுக்கு ஆதரவு இல்லை’

ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

விமல் அணி அதிரடி தீர்மானம்

10 கட்சிகள் கொண்ட குழு பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இருக்க தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் நால்வருக்கு வாய்ப்பு?

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது. அதில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.