முன்னாள் எம்.பி சூசைதாசன் காலமானார்

மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பி.எஸ். சூசைதாசன் சோசை, தனது 83ஆவது வயதில் நேற்று (13) மாலை காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டம் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ். சூசைதாசன் சோசை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

‘அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’

“அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். அகில இலங்கை தமிழ் மொழி தின விழா, யாழ். இந்துக் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.

(“‘அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’” தொடர்ந்து வாசிக்க…)

நெஞ்சம் மறப்பதில்லை……….

எழுபதுகளின் பிற்பகுதி எண்பதுகளின் ஆரம்பம் என் வாழ்வில் மறக்க முடியாத இனிமேலும் கிடைக்க முடியாத தன்னலமற்ற உறவுகளை தந்த காலம். ஒன்றிரண்டு வயசு மட்டுமே வித்தியாசமான அதற்கு முன்பு எந்தவித அறிமுகமும் இல்லாத இளையவர் நாம் ஒன்றாக அணிதிரண்ட காலம். இனம் பற்றிய சிந்தனை மட்டுமே எம் மனதில் இருந்த நாம் வரித்துக்கொண்ட இலட்சியம்.

(“நெஞ்சம் மறப்பதில்லை……….” தொடர்ந்து வாசிக்க…)

கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்

(மொஹமட் பாதுஷா)

மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது.

(“கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் பூரண ஹர்த்தால்

அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணத்தில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. போக்குவரத்து சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“யுனெஸ்கோவில்” இருந்து அமெரிக்கா, இஸ்ரேல் விலக தீர்மானம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அ​மெரிக்கா விலகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தே இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. அடுத்த வருடம் ( 2018) டிசம்பர் இறுதியில் யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் எனவும், அதுவரை அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளது. யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அதிக அளவில் பிழையான உணவு பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்

மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் கவலை!
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை ஏனைய இனத்தவர்களை காட்டிலும் அதிக அளவில் முஸ்லிம் மக்களே பிழையான உணவு பழக்கத்தை கைக்கொண்டு நோயாளிகளாக மாறுகின்றனர் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

(“கிழக்கில் அதிக அளவில் பிழையான உணவு பழக்கத்தை முஸ்லிம்களே கொண்டுள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

இறக்காமம் பிரதான வீதிக்கு காபட் இடுவதற்கான ஆரம்ப பணி ஆரம்பம்

இறக்காமம் பிரதான வீதிக்கு காபட் இடுவதற்கான ஆரம்ப வேளைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) ஆரம்பித்து வைத்தார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 86 மில்லியன் ரூபா செலவில் இப்பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், இறக்கமா பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏனைய அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நடும் வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜப்பார் அலியின் திடிர் மரணத்தையடுத்து பிற்போடப்பட்டுள்ளது

குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை.

(“குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்!

 

அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் சுஹீட் உருக்கம்

முட்டை கோழி பண்ணையாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க எதிர்வரும் வரவு – செலவு திட்டம் மூலமாகவேனும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட கோழி வளர்ப்போர் சம்மேளன தலைவர் ஏ. சி. எம். சுஹீட் கோரி உள்ளார்.

(“முட்டை கோழி பண்ணையாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)