தமிழாராய்ச்சி மாநாடும் அரை உண்மைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 10

ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

தேசிய அரசாங்கத்தால் பயனில்லை – ரணில்

தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிருலப்பனையில் நேற்று(13) பிற்பகல் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனைக் கூறியுள்ளார்.

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு; விவரம் இதோ

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டச் செயலகம் முன் ஈ.பி.டி.பி போராட்டம்

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி) இன்று (14) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது  தொடங்கியுள்ளன.  இரு தரப்புக்கும் இடையேயான தொடர்புகள் கடினமாக உள்ளது என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பேச்சுவார்த்தையாளருமான Mykhailo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பஸிலை சந்தித்த IMF பிரதிநிதி

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல் மூலோபாய, தந்திரோபாய அரசியலின் தேவை (பகுதி2)

   (வி. சிவலிங்கம்)

போரிற்குப் பின்னதான தாக்கங்களும், மாற்றங்களும் 

சமீப காலமாக தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் வெறுமனே கனவுகள் அல்லது அபிலாஷைகள் போன்றன மட்டும் சமூக மாற்றத்தைத் தருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கடல் வளம், விவசாய நிலங்கள், இளைஞர் தொகை, வெளிநாட்டு வருமானம் போன்றன இருப்பதாக கூறுவதன் மூலம் மாற்றம் ஏற்படுமா? தமிழ்த் தேசியம் என்பது சமூகத்தின் பல்வேறு கூறுகளை இணைக்கும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம், அதற்கான பொது அடிப்படைகள் குறித்த விவாதங்கள் தேவை. அவ்வாறாயின் தமிழ் சமூகத்தின் இன்றைய இருப்புக் குறித்த தெளிவான ஆய்வு அவசியம். குறைந்த பட்சம் கிடைக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாவது அவசியம்.  

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 02

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

உள்ளுர் அறிவு:

பெனடிக்ற் சின்னமணியை இருத்தி உரையாடுவதற்கு தயாரானேன். றெஜினோல்டும், சசியும் அருகே இருந்தார்கள். கடுமையா களைச்சிப் போயிருப்பயள். உடுப்ப மாத்திக்கி, றெஸ்ட் எடுத்துற்றுக் கதைப்பம் என்றார். நான் களைக்கல்ல. கதைப்பம் என்றேன். என்ன குடிப்பம் என்றார். பிளேன்ரி என்றேன். இஞ்சி போட்டதா, வேர்க்கொம்பு போட்டதா?. வேர்க்கொம்பு என்றேன். சாப்பாட்டுக்கும், நான் தங்குதவற்குமான அறைக்கும் மிகுந்த கவனமெடுக்க ஓடித்திருந்தார்.

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறதுதமிழ்த் தேசியம்

(அ.வரதராஜா பெருமாள்)


கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.
அரசியல் யாப்பின் 13வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படுகின்ற நிலைமையை உருவாக்கவேண்டும். அதற்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் எனநாம் கோரியபோதெல்லாம் – அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிடங்கலாக தமிழர்கள் மத்தியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்த ஒன்றுபட்ட தமிழர் மக்கள் அரங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்த வேளையில்,

ஐந்தில் நான்கு: பாஜகவின் வெற்றிப் பயணம்!

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தது. எனினும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து பாஜக தனித்தே அங்கு களம்கண்டது. உத்தர பிரதேசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள பாஜக, பிரதானப் போட்டியாளராக இருந்த சமாஜ்வாதி கட்சியின் எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது.