580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம்

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. 

லண்டனில் தீ; பச்சிளம் குழந்தை உட்பட இலங்கையர்கள் பலர் பலி

பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.

வெறும் பேச்சுகள் பூவுலகைக் காப்பாற்றுமா?

கிளாஸ்கோவில் கடந்த வாரம் நிறைவடைந்த பருவநிலை மாற்ற மாநாட்டை சுருக்கமாக எப்படி வர்ணிப்பீர்கள் என்று கேட்டபோது, “பிளா பிளா பிளா (அர்த்தமற்ற வெறும் பேச்சு) என்றுதான் கூற வேண்டும்” என்று பிரபல பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் கூறியுள்ளார்.

ராஜபக்‌ஷர்களை அசைத்துப் பார்த்த ‘கொழும்புப் போராட்டம்’

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது. 

சீன உர விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு

சேதன  பசளை தொடர்பில் சீன நிறுவனங்களுக்கு, பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மற்றும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள் உருவாகின. இலங்கையில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை மறக்க முடியாது: சரத் பவார் கடும் சாடல்

3 விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும் மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் விவசாயிகள் ஓராண்டு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதை யாரும் மறக்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

மனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்

(சாகரன்)

உயிரினங்கள் சிறப்பாக மனிதர்களிடம் அதிகம் காணப்பட வேண்டியது மனித நேயம். இன்னொன்றும் அதிகமாக காணப்பட வேண்டியதாக இருக்கின்றது அதுதான் ஐக்கியமாக வாழுதல். அது மனித குலமாக இருக்கலாம், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளின் மூலமே தம்மை பலமாக்கி தற்காத்து சந்தோஷமாக வாழ்வதை நாம் காணலாம்.

அம்பேத்கார்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அம்பேத்கர் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை ‘ஜெய் பீம்’ என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது.

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.