‘தாலிபன்களை எதிர்க்கத் தயார்’ – சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குழு ஒன்று, இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிடத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) எனும் இந்த அமைப்பின் வெளி விவகாரங்கள் பிரிவு தலைவர் அலி நசாரி அமைதியான பேச்சுவார்த்தையைத் தொடரவே தாங்கள் விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

71 ஆண்டுகளுக்கு பின்னர் எட்டிப் பார்த்த மழை

கிரீன்லாந்திலுள்ள  பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர்  முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், கடந்த 14 முதல் 16ஆம்  திகதி வரை மொத்தம் 7 பில்லியன் தொன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாகக்  கூறப்படுகிறது. மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக  தீவு முழுவதும் பரவலான பனி உருகல் ஏற்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி வோல்ட் மேயர் கூறியுள்ளார். அதே வேளை பனிக்கட்டிகள் உருகிவரும் வீதம் அதிகரித்து  வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களுக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததை அடுத்து மூன்று  ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் தலிபான்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடு தலிபான்களின் கைகளில் வீழ்வதை எதிர்த்தே பொதுமக்கள் வீதிகளில் இறங்கினர்.

தலைதூக்கும் துப்பாக்கிகள்

(லக்ஸ்மன்)

மறக்கப்படவேண்டியவைகளே மறுபடி மறுபடியாக அரங்கேறுகின்றன. அதன் தொடர்ச்சி என்னவாகும் என்பதான கவலையும் சிந்தனையுமாகவே வாழ்க்கையை நகர்த்துவோம். 

இலங்கை: கொரனா செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட பின்னர், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் குறையாது என்றும் இதற்காக யாரும் அச்சப்படவோ அல்லது மனச்சோர்வு அடையவோ கூடாது என்றும் ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களைக் கைப்பற்றினோம்: தலிபானுக்கெதிரான படைகள்

பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்குக்கு அருகேயுள்ள மூன்று மாவட்டங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாக, வட ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் படைகள் தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கிலேயே கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை

(நூருல் ஹுதா உமர்)

சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை

‘கடலுக்குள் போனால் பிணம் வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும்.

ஒட்டுசுட்டான் மண்ணை எடுத்து

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

நவீன உலக மாற்றத்தின் புதிய புதிய வருகையால், மட்பாண்டங்களின் உற்பத்தியும் பயன்பாடுகளும் அருகி வந்தாலும் தற்போதும் பல இடங்களில் இத்தொழில்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலைத்திருக்குமா?

FILE PHOTO: Mullah Abdul Ghani Baradar, the Taliban’s deputy leader and negotiator, and other delegation members attend the Afghan peace conference in Moscow, Russia March 18, 2021. Alexander Zemlianichenko/Pool via REUTERS/File Photo

ஆப்கானிஸ்தானை இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் தலிபான்கள் கடந்த வாரம் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், கடந்த 1996ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் நிலவிய தலிபான்களின் ஆட்சியானது திரும்பவிருக்கின்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 3,110  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769  பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 198 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,183  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.