ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
‘சர்வதேச சட்டத்தை மீறும் கனடா’
சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை கனடா மீறுவதாக, கனடா சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில், சவுதிக்கான அனைத்து ஆயுத ஏற்றுமதிகளையும் இடைநிறுத்துமாறு கனடாவை அந்நாட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகின்றது. கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கமானது ஆயுதங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாக நேற்று முன்தினம் வெளியான அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண, ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இறுதி அஸ்திரம் பயங்கரமானது; ஆனால், தவிர்க்கமுடியாது
பயணக்கட்டுப்பாடுகளை விதியுங்கள்; மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துங்கள்; இல்லையேல், கொரோனா மரணங்களையும் தொற்றாளர்களின் ஏறுமுகத்தையும் கட்டுப்படுத்தவே முடியாதென சுகாதார தரப்பினரும் நிபுணர்களும் வலியுறுத்தும் போதெல்லாம், ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யைப் போன்றிருந்த அரசாங்கம், இறுதி அஸ்திரத்தைக் கையில் எடுக்கவுள்ளதாக பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இலங்கை: கொரனா செய்திகள்
எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (12) நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டில் உள்ள அபாயகரமான சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்த போதிலும் அரசாங்கம் ஏன் இன்னும் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு; இளைஞன் படுகாயம்
டோக்கியோ 2020 இல் கியூபா
ஆகஸ்ட் 8, 2021, ஞாயிற்றுக்கிழமை, டோக்கியோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை அளிக்கப்பட்டது. பெரும் தொற்றுக் காரணமாக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு பல்வேறு மேடைகள் அமைக்கப்பட்டு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றன.
சுகாதார அமைச்சு கைமாறுகிறது?
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரை அதிகமாகக் காணலாம். இந்நிலையில், நேற்றுக் காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.