தானாக தரையிறங்கியது புஷ்பக்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ராக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விண்ணில் செலுத்தக்கூடிய ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீண்டும் இந்திய மாணவர் கடத்தல்!

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் கடத்தப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.தே.க. அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை அறிவித்தார். 

வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை!

இந்தாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தற்போது வரை, புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. வோ வான் துவாங் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஓராண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார்.

தமிழருக்கு எதிரான கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே.

ரூபாயின் மதிப்பு வேண்டுமென்றே குறைக்கப்படுகின்றதா?

தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

’’ புதிய படையணியை உருவாக்குவது முரண்பாடுகளை ஏற்படுத்தும் ’’

இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு இந்திய அரசாங்கத்துடன் பேசி தீர்வை எட்டுவதை விட்டு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது கடலில் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

19.03.2024 செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணி

(Siva Nages)

வடக்கு மாகாணத்தின் நேற்றைய ( 18.03.2024)வெப்பநிலை சராசரி 31 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நாளின் அதி கூடிய வெப்பநிலை ( Maximum Temperature) 36 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. உணரக்கூடிய வெப்பநிலை( Feel Temperature ) 34 பாகை செல்சியஸ் ஆக இருந்துள்ளது.

சுட்டெரிக்கும் வெப்பம்: சூட்டை தணிக்க கடற்கரைகளில் தஞ்சம்

பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் ஆகும்.