விசா இன்றி இலங்கைக்கு பயணிக்க அனுமதி

7 நாடுகளிலிருந்து பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றை அமைச்சரவை அனுமதித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென  சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு பயணிகள் விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதெனவும் இந்நடைமுறை உடனடியாக அமுல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாழ விடு War விடு (பகுதி 4)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

வரலாற்றைப் பேசுவதற்கு மனம் கொடுக்காத சூழலில் அண்மைய மருத்துவ மனை மீதான தாக்குதலை பேச விளைகின்றேன்.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி ஷிமோன் பெரஸ், செப்டம்பர் 13, 1993 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய சுயாட்சி குறித்த வரலாற்று இஸ்ரேல்-பிஎல்ஓ ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பா?? இந்தியாவில் ஹமாஸ் தடை செய்யப்பட்டுள்ளதா??

(அ.முத்துக்கிருஷ்ணன்)

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோளாகத் தொடங்கப்பட்டது.

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி….?

(வீரமணி ஜெயகுமார்)

ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கிய ஈ.வெ.ராமசாமி ஒரு தேசத்துரோகின்னு ஏன் ஒரு சிலர் இன்னிக்கும் அலர்றாங்க?? அழறாங்க…??
ஏன்னா…
இந்தியாவை ஆண்ட மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் தமிழ் மன்னர்களும்
மனுதர்ம படியே ஆட்சி
புரிந்தனர்.
ஆனால் 1620 கள் தொடங்கி
ஆட்சிசெய்த
ஆங்கிலேயர்கள்.

அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

கறுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் – 22: அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘அரகலய’ இன்றைய இளந் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். சுதந்திர இலங்கையின் 75 ஆண்டுகால வரலாற்றில் அரகலயவுக்கு தனியான இடமுண்டு. ஆனால் இது இலங்கையர்கள் எழுச்சி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இலங்கை சுதந்திரமடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளேயே மிகப்பெரிய மக்கள் போராட்டம் 1953இல் வெடித்தது. இது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கடந்தவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

”பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்”

எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்.நகர்… மட்டக்களப்பில் பிசு பிசுத்தது

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.  

ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் (19) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. “ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த  போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது.

பனைமரம் எங்கள் மண்ணின் வளம்

வணக்கம்.

உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் நாளைய தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்வுக்காக… வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பின் ஊடாக பலதரப்பட்ட பசுமை செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம் பல ஆண்டுகளாக தொடர்ந்து.

IMF இன் வௌிப்படை தன்மை குறைந்த நிலையை எட்டியது

செப்டம்பரில், IMF திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது: வெரிட்டே ரிசர்ச்

உபதலைப்பு: இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களைத் தவறவிட்டதால், வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை ”ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.  சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் 17 வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் ”IMF  கண்காணிப்பான்’ இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவெற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40 ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.