மைத்திரியுடன் பேச சி.வி.க்கு அழைப்பு

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எனக்கிடையிலான இந்தக் கலந்துலையாடல், கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தரவுகள் தேவையாகவுள்ளன’ என்றார். ‘ வடமாகாணசபை உறுப்பினர்கள், தங்களது பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உள்ளிட்ட விவரங்களைத் தரவேண்டும். அந்தத் தரவுகளை வைத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடலாம்’ என்று அவர் மேலும் கூறினார்.

இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பால் யாழில் களேபரம்

நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் நிலஅளவை நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனின் அலுவலகம், நேற்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலருடைய அலுவலகம் முற்றுகையிடப்பட்டு வடமாகாண சபை உறுப்பினர்களால் திங்கட்கிழமை (11)மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளரை எவரும் சந்திக்க முடியாதவாறும் மாவட்டச் செயலாளர், தனது அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாதவாறும் நேற்று மதியம் 12 மணி வரையில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், இன்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள செம்பொன் வாய்க்கால் இந்து மயானம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காணிகளின் சொந்தக்காரர்களும் அதிகாரிகளும் காணிகளைப் பார்வையிட்டனர். இக்காணிகளிலிருந்த 7 வீடுகளும் தற்போதும் நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனால் முடியாதா?

‘வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், வடக்குக்கு பொருத்தமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்து அதனை நிறுத்த முடியும் தானே, பின்னர் ஏன் வீணாக வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றுகின்றீர்கள்?’ என வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.

(“சம்பந்தனால் முடியாதா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதத்தினைப் பார்த்தால், முன்னைய ஆட்சியின் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கு இவர்கள் அருகதையே இல்லாதவர்களாக தெரிகிறார்கள். அத்துடன் இவர்கள் குற்றஞ்சாட்டும் ஊடகங்கள், முன்னைய சர்வாதிகார  ஆட்சிக்கு துணைபோனவை எனவும் இனவாதத்தினை தூண்டுகின்றன  எனவும்  கூறி  இவர்கள் தங்கள் ஆவேசமான பகிரங்கப் பேச்சுகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள்.

(“ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்” தொடர்ந்து வாசிக்க…)

பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை

பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

(“பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 8)

1961 இல் எங்கள் பெரிய அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா காட்டிய ஆர்வமும் பெரிய அண்ணன் திருமணம் உடனே நடக்க காரணமானது.இதனால் கொஞ்சம் கடன் வந்தது.அதே வருடம் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மூலமான ஆசிரியர் நியமனம் சரசாலைப் பாடசாலையில் கிடைத்தது.இது எங்கள் அய்யாவின் முயற்சிக்குக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.மேலும் அவருக்கு விரைவிலேயே நிரந்தர நியமனமும் கிடைத்துவிட்டது.நடராசாவின் பின்னால் சென்றோர் நியமனம் கிடைத்தாலும் நிரந்தரமாக பல வருடங்கள் காத்திருந்தனர்.எமது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் படித்த முதல் தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை சிறுபான்மை தமிழர் மகா சபைக்கும் எம்.சி. சுப்பிரமணித்தையும் சாரும்.இதற்கு பாதை வகுத்துக் கொடுத்த பெருமை முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து முன்னெடுத்த சிறிமா அம்மையாரும் போற்றப்பட வேண்டியவர்.

(“பற்குணம் (பதிவு 8)” தொடர்ந்து வாசிக்க…)

ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று(23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிறந்த குழந்தை முதல் சுகவீனமுற்றிருக்கும் முதியோருக்கும் இந்தக் கடன்சுமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்கு 9500 பில்லியன் ரூபா கடன்சுமை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 10500 பில்லியன் ரூபாக்களாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

(“ஒவ்வொரு இலங்கையனும் ரூ 5.25 இலட்சம் கடனாளி” தொடர்ந்து வாசிக்க…)

19 எம்.பிக்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர், நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்கள் ஐவர், பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மூவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாஹல ரத்னாயக்க தெரிவித்தார்.

தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் – சரத் பொன்சேகா

என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்’ என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம் – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)