தோழர் எம்.ஜி.பசீர் எம்மைவிட்டுப் பிரிந்தார்!

தோழர் எம்.ஜி.பசீர் நேற்றைய தினம் (பெப்.12) புத்தளம் வைத்தியசாலையில் காலமாகி, இன்றைய தினம் நல்லடக்கம் செய்த துயரமான செய்தி வந்திருக்கிறது.தோழர் பசீர் யாழ்ப்பாண முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 1990 ஒக்டோரில் புலிகள் வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை வெறுமனே 2 மணித்தியால முன் அறிவித்தலில் வடக்கிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தபோது தனது மக்களுடன் சேர்ந்து வெளியேறி அவர்களைப் போலவே மன உளைச்சலுடன் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்.

இந்த நூற்றாண்டின் சாதனைப் படம் த்ரிஷ்யம்..!

(ரதன் சந்திரசேகர்)

த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது.

ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 74,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 67,831 பேர் குணமடைந்துள்ளனர். அதன் பிரகாரம், 6 ,269 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 384 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குச் சொந்தமான தலவாக்கலை தெவிசிறிபுற ரத்னில்கல பிரதேசத்தில், ஒரு குழுவினர் அத்துமீறி காணியை சுவீகரித்ததால் அதனை விடுவிக்கக்கோரி, தலவாக்கலை நகர பொதுமக்கள், இன்று(11) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயற்கை வளம், பல்லுயிர் பாதுகாப்பு: மரம் நடுவது எப்படி – தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்.

மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.

இலங்கை: கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம ஜீவன்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இந்த புதிய வீரியம் கொண்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் டை அணியாததால் மாவோரி தலைவர் வெளியேற்றம்

பாராளுமன்றத்தில் டை அணிய மறுத்ததால், நியூசிலாந்து மாவோரித் தலைவரான றவிரி வைடிடி இவ்வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்கத்தேய ஆடைகளை அணியத் தன்னை வலியுறுத்துவதானது தனது உரிமைகளின் மீறலொன்று எனவும், பழங்குடியினக் கலாசாரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியொன்று என வைடிடி தெரிவித்துள்ளார்.

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது.

பஸ் சாரதியான பிள்ளையான் எம்.பி

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகந்தன் (பிள்ளையான்), சிறிது நேரம் பஸ் சாரதியாக இருந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.