யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், இன்று (04) உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட பட்டானிக்சூர்

வவுனியாவில், முடக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், வவுனியா நகரிலுள்ள தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்து வைத்துள்ளமையால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

தோழர் சி.தருமராசன் காமானார்!

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கல்லுவத்தை வாழ்விடமாகவும், தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழரும், தொழிற்சங்கவாதியுமான தோழர் சின்னத்துரை தருமராசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தோழர் தருமராசன் மறைவுக்கு செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர அஞ்சலி செய்வதுடன், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனதும் என குடும்பத்தினதும் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

அதிமுகவின் அராஜகச் செயலுக்கு கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகம் கிராம மக்கள் சபைக் கூட்டங்களை நடத்தி “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற தீர்மானம் நிறைவேற்றி வருகின்றது. இந்த இயக்கத்தில் கட்சியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை தடுப்பது அதிகார அத்துமீறலாகும். “கிராமசபை” என்ற பெயரைப் பயன்படுத்துவது ‘சட்டமீறல்’ என தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு வெளியிட்டு தனது ஆளுங்கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கடும் பனியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 39ஆவது நாளாக நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பழங்குடியை பிரதிபலிக்குமாறு தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா

இன்றிலிருந்து அவுஸ்திரேலியாவானது தங்களது தேசிய கீதத்தின் வித்தியாசமான வடிவமொன்றை பாடவுள்ளது. சொற்களின் மாற்றமொன்றை அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்தே தேசிய கீதமானது வித்தியாசமான வடிவமொன்றில் பாடப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவின் நீண்ட பழங்குடியின வரலாற்றைப் பிரதிபலிக்கும் முயற்சியொன்றாக அவுஸ்திரேலியாவை இனி தேசிய கீதமானது இளமையான மற்றும் சுதந்திரமான எனக் குறிப்பிடாது. “நாங்கள் இளமையானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள்” என்பதற்குப் பதிலாக “நாங்கள் ஒன்றானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள்” என இசைக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்

நாட்டில் தேய்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை இந்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

3வது சுற்றுலா குழு நாட்டுக்கு வருகை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது சுற்றுலா குழு நாட்டை வந்தடைந்துள்ளது. உக்ரைன் நாட்டிலிருந்தே மூன்றாவது சுற்றுலா குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது. இவ்வாறு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 173 சுற்றுலாப் பயணிகள் மத்தல விமான நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

பேலியகொடை புதிய மரக்கறி மொத்த சந்தையில், ஆறு வர்த்தகர்களுக்கு கொ​ரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. இதேவேளை, கம்பஹாவில் இருந்து வருகைதந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

வீதிகளில் குப்பை; மார்கழி கோலமிட்டுத் தடுப்பு

சென்னையில் வீதிகளில் குப்பையைக் கொட்டி பொதுமக்கள் அசுத்தம் செய்யும் இடங்களில், மார்கழி கோலமிட்டுத் தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.