மழைநீர் சேமிப்பு

இரணைமடு குளத்தின் கண அளவிலும் பார்க்க நான்கு மடங்கு கொள்ளளவு கொண்ட நீர்நிலைகளை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள் அமீர்கான் மற்றும் கீரன் ராவ் தம்பதியினர். அவர்களுடைய இந்தப் பணி மேலும் தொடர்கிறது.

ட்ரம்பின் தேர்தல் தோல்வியை இல்லாமல் செய்ய 17 மாநிலங்கள் ஆதரவு

ஐக்கிய அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் வாக்களிப்பு முடிவுகளை நிராகரிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தைக் கேட்பதன் மூலம் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியை மாற்றுவதை எதிர்பார்க்கும் டெக்ஸாஸின் வழக்குக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், 17 ஐ அமெரிக்க மாநிலங்களும் தமது ஆதரவை நேற்று வழங்கியுள்ளன.

தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது

(புருஜோத்தமன் தங்கமயில்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சாணக்கியன் இராசமாணிக்கமும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன.

97 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (10) நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இரவு நடைபெற்ற பேச்சில் முன்னேற்றமில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் டில்லியில் (செவ்வாய்க்கிழமை)நேற்று இரவு 8மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

நரேந்திர மோடி அதிரடியாக ஏற்பாடு

சிங்குவில் கடந்த 13 நாள்களாக தொடரும் விவசாயிகள் பேராட்டத்தை
முடிவுக்கு கொண்டுவர மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?

(மொஹமட் பாதுஷா)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது.

த.தே.கூ எம்.பியின் இரகசியம் நாமலால் அம்பலம்

நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (08) கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிலோமீற்றர் பாதைக்குகூட செப்பனிடப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தினார்.

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் துப்பாக்கித் துளைகளும்

கார்த்திகை தீபமேற்ற, வடக்கு, கிழக்கில் பல்வேறான இடையூறுகள் விளைவிக்கப்பட்ட நிலையில், மஹர வானத்தை முட்டுமளவுக்கு மேலெழுந்த ஒளிப்பிளம்புக்குப் பின்னால், கைதிகள் எட்டுப் பேர் மரணமடைந்தும், 999 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என்பது, பொழுது புலர்கையில் புரிந்துகொள்ள முடிந்தது.