ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது

ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது. ஒன்றை அடையவேண்டு​மாயின், ஏதாவதொன்றை அர்ப்பணிக்க வேண்டுமென்பர். ஆனால், எவ்வளவுதான் அர்ப்பணித்தாலும் சாதாரண கோரிக்கையையேனும் நிறைவேற்றப்படாவிடில், அம்மக்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகவே இருக்காது.

மரடோனா காலமானார்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் காலமானார் என அவருடைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். இறக்கும் போது அவர்க்கு வயது 60 ஆகும். அவர், 1986ஆம் ஆண்டு உலக கால்பந்து கிண்ணத்தை ஆர்ஜென்டினா வெல்வதற்கு பெரும் பங்குவகித்தவர்.

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியின் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21261ஆக உயர்ந்துள்ளது. 5720 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

கண்டி, களுத்துறையில் முடக்கப்பட்ட பகுதிகள்

கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் நேற்றிரவு முதல், மறு அறிவித்தல் வரையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், களுத்துறை – பண்டாரகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம கிழக்கு, எபிட்டமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி-அக்குறணை பிரதேச செயலக பிரிவில் உலுகஹதென்ன, தெலெம்புகஹவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத் தலைநகரை சரணடைய திக்ரே படைகளுக்கு 72 மணித்தியால காலக்கெடு

திக்ரே பிராந்தியத் தலைநகர் மெகெல்லே மீது இராணுவம் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சரணடைவதற்கு 72 மணித்தியாலங்களை திக்ரே பிராந்தியப் படைகளுக்கு எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட் வழங்கியுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை; ‘குழந்தை’களை வதைக்காதீர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கல்வியின் நோக்கம் என்ன என்ற வினாவை, நாம் அடிக்கடி மீளக் கேட்டுக்கொள்வதற்கான நிகழ்வுகள், தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. கல்வி என்பது பரீட்சையாகவும் கல்வியைக் கற்பது என்பது பரீட்சையில் சித்தியடைவதாகவும் சுருங்கி விட்டது; கல்வியின் நோக்கங்கள் மாறிவிட்டன; கற்பித்தலின் நோக்கங்களும் மாறிவிட்டன; இது வருந்தத்தக்கது. இதன் பின்னணியிலேயே கல்வி என்பது, எவ்வாறு மிகப்பெரிய வணிகமாக உருப்பெற்று நிற்கிறது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சுப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை: 2021 பட்ஜெட்டுக்கு 151 ஆதரவு

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை நடைபெற்றது. அதில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மனிதன்

(George RC)

எங்கள் பெரியம்மாவின் மகனான பாலா அண்ணை யக்கத்தில் இருந்தார்.
எங்களுக்கோ அதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை.
எங்கள் ஊருக்குள் ஒரு அண்ணை தான் பலரை இயக்கத்தில் சேர்த்தார். அப்படியே எங்கள் ஊரவர்கள் பலர் இயக்கத்தில் இருந்தார்கள்.
அந்த அண்ணையின் வீட்டில் இயக்ககாரர்கள் எல்லாம் வந்து சந்திப்புகள் நடத்துவார்கள்.