கும்பகோணத்தில் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு

இன்று மறைந்த ஈழவிடுதலைப் போராட்டத்தின் தமிழ்நாட்டு மூலவர் தோழர் ஸ்ரானின் அண்ணாவின் படத்திறப்பு நிகழ்வு அவரின் பிறந்த ஊரான குடந்தையில் நடைபெறுகின்றது. இதில் சிறப்பு வருகையாளராக பத்மநாபா மக்கள் முன்னணியின் தோழர் சுகு கலந்து கொள்கின்றார்

சென்னையில் பத்மநாபா மக்கள் முன்னணியினரின் தியாகிகள் தினம்

பத்மநாபா மக்கள் முன்னணியும் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து நடாத்திருந்த தியாகிகள் தினம் சென்னையில் நடைபெற்றது. தோழர் சங்கரின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  UCPI, CPI தோழர்களும் பத்மநாபா மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பத்மநாபா மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் சுகு சிறப்பு செயற்பாட்டளராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர் சென்னையை மையயப்படுத்தி தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்து வரும் பத்மநாபா மக்களின் முன்னணியின் தோழர் ஸ்ரனிஸ்  இன் ஒருங்கிணைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தோழர் பாஸ்கர் தோழர் சுந்தரமூர்த்தி போன்ற ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இன் செயற்பாடாளர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்தமிழ் நாட்டில் அகதிகளாக இருக்கும் பொது மக்களும் கலந்து கொண்டனர். தோழர் சுகுவுடன் இணைந்து பலரும் சிறப்பு பேருரை ஆற்றினர்.

கனடாவில் தியாகிகள் தினம்.

 

இன்று கனடாவின் ரொறன்ரோவில் 26 வது தியாகிகள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு 9 மணியளவில் முடிவுற்றது. தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வினை பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் ஒழுங்கு செய்திருந்தனர். தோழர் பிரதாப் இன் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் 1 நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்த தியாகிகள் தின நினைவு கூறல் நிகழ்வில் TELO, PLOTE, EPDP. EROS, EPRLF, பழம் பெரும் கம்யூனிஸ்ட்டுக்கள், சம உரிமை இயக்கம், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோழர் ஈழமணி, தோழர் நேசன்(சம உரிமை இயக்கம்), ஆதவன், தோழர் மகேஸ் (ஈபிடிபி). தோழர் முருகன்(வாத்தி) (ரெலோ) தோழர் மித்திரன்(ஈபிடிபி). ஜோர்ஜ்(தாயகம்) தோழர் செழியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

(“கனடாவில் தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [1]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபகர் பத்மநாபா உட்பட, 13 தோழர்கள் பலி கொடுக்கப்பட்ட ஜூன் 19 தினத்தை, தியாகிகள் தினம் என பிரகடனப்படுத்தி தாம் இழந்த போராளிகள் உட்பட, அனைத்து விடுதலை போராளிகள், பொதுமக்களின் உன்னதமான தியாகத்தை நினைவு கூர்ந்து உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், வருடாவருடம் அஞ்சலி செலுத்த தோழர்கள் தவறுவதில்லை. இன்று பல அணிகளாக அவர்கள் பிரிந்து நின்றாலும், இந்த தினத்தில் அவர்கள் மனதில் நிறைந்து நிற்பது, பத்மநாபாவின் நினைவுகளே. அந்த தியாகிகள் தின வரிசையில் 26வது நினைவு நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஈ பி ஆர் எல் எப் இன் கலங்கரைவிளக்கம் ஒளி இழந்துபோனது. 2016 ஜூன் 1ம் திகதி ஈ பி ஆர் எல் எப் இன் இந்திய பிதாமகன், கும்பகோணத்து திராவிட தமிழன், எங்கள் ஸ்டாலின் அண்ணா இவ் உலக வாழ்வை விட்டகன்றார். ஈழ மக்கள் விடுதலைக்காக சுடர் விட்டு பிரகாசித்த தியாக தீபம் அணைந்துபோனது.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [1]” தொடர்ந்து வாசிக்க…)

தாயகத்தின் கிழக்கு பிரதேசத்தில் தியாகிகள் தினம்.

 

மட்டக்களப்பு அம்பாறையிலிருந்து மட்டும் அல்லாது திருகோணமலை வன்னி யாழ்ப்பாணம் என்று பல பிரதேசங்களிலிருந்தும் பத்மநாபா மக்கள் முன்னணியினர் கலந்து கொண்ட இந்த சிறப்பு நிகழ்வு தோழர் சந்திரன் தலமையில் நடைபெற்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் ஆதரவாளர்களாகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. பல மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ் நிகழ்வு கிழக்கில் மூவினம மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது மட்டும் அல்லாது போராட்டகாலத்தில் சந்தேகங்களுக்கு உள்ளான இன உறவுகளை மீண்டும் இறுக்கமாக கட்டியமைப்பதற்கான ஒரு அடையாளமாக பலராலும் பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கால ஈபிஆர்எல்எவ் இன் விடுதலைக்காக தம்மை அர்பணித்த தோழர்களின் குடுமப உறவுகள் தமது உறவுகளின் தியாகங்களை மீண்டும் மீண்டு நினைவு கூரும் கௌரவிக்கப்படும் ஒரு நிகழ்வாக இது பரிணாமம் அடைந்திருந்ததை கூட்டத்தின் இடையே அவதானிக்க கூடியதாக இருந்தது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் வரதராஜப்பெருமாளும் அக் கட்சியின் செயலாளர் தோழர் மோகன் அவர்களும் சிறப்புரையாற்றினர் தோழர் சுகுவின் வழி நடத்தில் இந் நிகழ்வு சிறப்பாக பத்மநாபா முன்னணியின் தோழர்களால் நடைபெற்று முடிந்திருக்கின்றது. (செய்திகள் தொடரும்…)