கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம்……?

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம் மாணவர்களை சுட்டதால் எப்படி வந்தது.இப்படி எத்தனை சம்பவங்கள் தமிழ்ப் பொலிசாரினால் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டன என்பது தெரியாமல் உளறுகிறார்கள்.தமிழன் சுட்டால் இனவாதம் இல்ல.சிங்களம் பேசுபவர் சுட்டால் இனவாதம்.புலிகள் தெருத்தெருவாகச் சுட்டபோது கொந்தளிக்காத சமூகம் இப்போது கொந்தளிப்பது ஏன்.அரசியல் பிழைப்பு.சமூகத்தை சீரழிப்பது,சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது.என்ன மலிவான அரசியல் சிந்தனை.சட்டத்தை மதிக்காத பல்கலைக் கழக மாணவர்கள் நாளை எப்படி சமூகத்தை கட்டி எழுப்புவார்கள். பொலிசாரின் நடவடிக்கை தவறானது.கண்டுக்க வேண்டியது.சட்டம் நிர்வாகத்துக்கு உட்பட்ட தவறு. மன்னிக்க முடியாதது.ஆனால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது இனவெறியை ஊக்குவிப்பதும் மன்னிக்க முடியாது.

(Vijaya Baskaran)

விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்

லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

(“விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார்” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.

(“ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!” தொடர்ந்து வாசிக்க…)

சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.

நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன், அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

(“சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது.” தொடர்ந்து வாசிக்க…)

கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல் ஆபத்தானது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலின் குறுக்குவெட்டு முகம் கொலைகளின் பின்னே தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.

(“கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(“யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….” தொடர்ந்து வாசிக்க…)

அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!

அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது! காரணம் ,உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுக்கொண்டதன் விளைவே போலீசாரை வெட்டியது .. ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.அவா குழு அவசரமாக வளர்கின்றது,
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ‘ஆவா’ குழு உரிமை கோரியுள்ளது.

(“அவா குழு உரிமை கோரியுள்ளது போலீசாரை வெட்டியது !!!!!!” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?

(சாகரன்)

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதிகோரியும் பிரதேசம் தாண்டி இன மத மொழி வேறுபாடுகள் இன்றி மக்கள் இயல்பாக வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த ஐக்கியமான போராட்டத்தை ஏனைய விடயங்களிலும் விஸ்தரிப்பதற்குரிய தலமையை… செயற்பாட்டை… நாம் இனம் மொழி சமய வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கியிருக்கு வேண்டும் அவ்வாறு நாம் செய்வில்லை.

(“மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ஆர்ப்பாட்டம்; நாளை ஹர்த்தால்

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவத்தைக் கண்டித்து, வட மாகாணம் முழுவதும், நாளை செவ்வாய்க்கிழமை (25), ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்புக்கு, யாழ். மாவட்ட வர்த்தகர் சங்கமும் ஆதரவு வெளியிட்டு, அக்கட்சிகளுடன் இணைந்துள்ளது.

(“இன்று ஆர்ப்பாட்டம்; நாளை ஹர்த்தால்” தொடர்ந்து வாசிக்க…)