“திரைக்கு பின்னால்”முதல் மரியாதை”

“எப்படியும் இந்தப் படம் ஓடாது.அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…”என்று பாரதிராஜாவிடம் பணம்வாங்க மறுத்தாா் இளையராஜா !முதல் மரியாதை 1985 ஆம்ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் .இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்?

(மஹேஸ்வரி விஜயனந்தன்)

அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்க​ளின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

கிழக்கில் அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வகையான பிரத்தியேக வகுப்புகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத் பணிப்புரை வழங்கியுள்ளார்.

‘பொருள்களைக் கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள்’

“யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களைக் கொள்வனவு செய்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்; அம்பாறையில் சர்ச்சை


(மப்றூக்)
ஒரு பிள்ளையை, ஒரே நேரத்தில் உரிமை கோரிய பல தாய்மார்கள் பற்றிய கதைகளை, பாடப் புத்தகங்களிலும் பக்கத்துத் தெருக்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்.

மினுவங்கொடை பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனம்

கம்பஹா – மினுவங்கொடை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு குறித்த பி​ரதேசத்திலிருந்து ஏனைய சமூகத்துக்குள் கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டியது அவசியமெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

“உலகம் மாறிவிட்டது” என்ற கோஷத்தை, நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். “தொழில்நுட்ப ரீதியில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது”, “மனிதன் இன்னும் நாகரிகமுள்ளவனாக மாறிவிட்டான்” போன்றவையும் நாம் அடிக்கடி கேட்பவை!

புங்குடுதீவைச் சேர்ந்த 20 பேர் சுயதனிமையில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஓமந்தையை மாசுபடுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை

வவுனியா – ஓமந்தையில் இயங்கும் ஈயத்தொழிற்சாலையால் இயற்கை மாசுபடுத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, குறித்த தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அங்கு சென்று நேரடியாக பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்!

(Thambirajah Jeyabalan)

இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!!
கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!
பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.