மட்டக்களப்பு மக்களின் ’கூட்டமைப்புக்கான செய்தி’

வடக்கு, கிழக்கு மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ​செய்தியைக் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், த.தே.கூ தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதே இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயசீலன் இராஜினாமா

திருகோணமலை, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் புத்திசிகாமணி ஜெயசீலன், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை, திருகோணமலை பிரதித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

’த.தே.கூவின் பின்னடைவை பொறுப்பேற்கிறோம்’

நடந்து முடிந்துள்ள தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்பதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு: கலையரசனுக்கு தேசியப்பட்டியலில் இடம்

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது: மக்களின் விருப்பு வாக்கா…? வேறு சிலரின் விருப்பங்களா…?

(சாகரன்)

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிந்து இது பற்றிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், ஆனந்தங்கள், கோவங்கள் என்று நாலு திசைகளிலும் பொறி பறந்து கொண்டு இருக்கின்றது. ஏதோ ஒரு தேர்தல் முடிந்து கடந்து போனது போன்ற அதிர்வுகளை இத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திவிட்டுப் போகவில்லை.

பொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.

2.30 மணிக்கு முதலாவது பெறுபேறு

பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் முடிவுகள்…. தேர்தல் முடிய முன்பே….

(சாகரன்)
2020 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 225 ஆசனங்களுக்கான தேர்தல் 22 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. 196 உறுப்பினர்கள் நேரடியாகவும் மிகுதி 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகளினாலும் தெரிவு செய்யப்படும். இது விகிதாசாரப் பிரிதிநித்துவ முறை தொகுதிவாரித் தேர்தல் அல்ல.

பாரிய வெடிப்பில் பெய்ரூட் தவிக்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய கொள்கலன் வெடிப்பொன்றானது பயங்கர அழிவை ஏற்படுத்தியதோடு குறைந்தது 100 பேரைக் கொன்றதுடன், ஏறத்தாழ 4,000 பேரைக் காயப்படுத்திய நிலையில், தப்பித்தவர்களைத் தேடி லெபனானிய மீட்புப் பணியாளர்கள் இன்று சிதைவுகளைத் தேடிய வண்ணமிருந்தனர்.

சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு

யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில், கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.