அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன.

யாழ் பல்கலை துணைவேந்தர் நியமனம்

யாழ் பல்கலை துணைவேந்தர் நியமன பட்டியலை தயாரிக்கும் குழுவில் உள்ள கி. விசாகரூபன் – ஒரு காமுகர் என குற்றம்சாட்டப்பட்டவர்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தேர்வுக்குழு மீண்டும் வடக்கின் கல்வியை காமுகர்களின் கையில் ஒப்படைக்கப் போகின்றதா?

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் – மாளவிகா மோகனன்

நம்மைச் சுற்றியிருக்கும் நிறவெறியைப் பார்ப்போம் என்று ‘மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்

(புருஜோத்தமன் தங்கமயில்)

பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல தரப்புகளும் ஆர்வம் கொண்டிருந்தன.

யாழ் நூலக எரிப்பு: பாசிசத்தின் இன்னொரு வடிவம்!

(Maniam Shanmugam)

1981 மே 31 – யூன் 01 இடைப்பட்ட நள்ளிரவு அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன – ஆர்.பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களாலும், பொலிசாராலும் யாழ்ப்பாண நகரம் மயான பூமியாக மாற்றப்பட்டது.

1981 யூன் யாழ்ப்பாணச் சம்பவங்கள் வெளியுலகிற்குப் போன விதம்!

(Maniam Shanmugam)

1981 யூன் மாதம் 04ஆம் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடைபெற்ற வேளையில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் குண்டர்களும், பொலிசாரும் இணைந்து யாழ்ப்பாண நகரில் நடத்திய வெறியாட்டத்தின் போது நடைபெற்ற, இதுவரை வெளிவராத ஒரு விடயம் பற்றிய தகவல் இது.

இனவெறித் ’தீ’

(என்.கே. அஷோக்பரன்)

அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு பூட்டப்பட்டு, நிலத்தில் தலைகுப்புறப் படுக்கவைக்கப்பட்டு, குறித்த பொலிஸ் அதிகாரி, தனது முழங்காலால் ஃபுளொய்டின் கழுத்தை, நீண்ட நேரம் அழுத்திப் பிடித்திருந்ததன் காரணமாக, மூச்செடுக்க முடியாது ஃபுளொய்ட் உயிரிழந்தார்.

மே 26, 2020: மீண்டும் ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல்…..

(சாகரன்)
மே 26, 2020 ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல் என்ற சிந்தனை மீண்டும் அரங்கேறிய நாள். உலகில் கறுப்பு, வெள்ளை, இடை நிறமான பழுப்பு நிறம் என்ற நிறப் பாகுபாடுகளில் வெள்ளையினமே மேன்மையானது என்ற பாகுபடுத்திப் பார்க்கும் வெளிப்பாடுகள் இன்று வரை உலகின் பொலிஸ்காரனாக தன்னை வரிந்து கட்டிய அமெரிக்காவில் குறைந்த பாடில்லை.

சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா?

அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

கிழக்கிலிருந்த 160 இந்தியர்கள் நாடு திரும்பினர்

கிழக்கு மாகாணத்தில் நிர்க்கதியான நிலையில் தங்கியிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த 160 பேர், அவர்களின் சொந்த நாட்டுக்குச் செல்வதற்காக இன்று (01) அதிகாலை கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர்.