ஊடகங்கள் எழுப்பி இருக்க வேண்டிய கேள்விகள்

ஏன் மருத்துவ சேவை பலவீனமாக இருந்தது? அவ்வாறு பலவீனமாக இருந்தது தான் கூடுதல் மரணங்கள் சம்பவிக்கக் காரணமா?
சீனாவில் வூஹான் மாநிலம் ஜனவரி 23இல் முற்றாக மூடப்பட்டது. ஜனவரி 31இல் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கையை அறிவித்தும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை?
உலனின் செல்வத்தின் 50 வீதத்தை தன்னாட்டில் வைத்துள்ள அமெரிக்காவில் ஏன் இவ்வளவு தொகையான அழிவு அதுவும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது?

மனது கேட்குதில்லையே இந்த வலிந்தெடுத்த மரணங்களை கேட்டும் போது

(சாகரன்)

சில தினங்களுக்க முன்பு எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து தனது மிக நெருங்கிய உறவினர்… மைதுனி முறையானவர் கொரனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனையில் மரணித்ததாக கூறினார். அவருக்கான ஆறுதலை சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவரின் பேச்சை செவி மடுத்தேன்.

நலவாரிய அட்டை இல்லாட்டியும் வயிறு இருக்குல்ல!- அரசின் நிவாரணம் கிடைக்காமல் அல்லாடும் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்

ஷாஜியை முதன்முதலில் சந்தித்த தருணம் மனதைவிட்டு இன்னும்கூட அகல மறுக்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஷாஜி தவழ்ந்து செல்லும் மாற்றுத்திறனாளி. அவரது இரண்டு கால்களும் போலியோ பாதிப்புக்குள்ளாகி சிறுத்துப்போய் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு மனம் நிரம்பத் தன்னம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டி வந்தார் ஷாஜி.

வருமானத்தை இழந்த சகலருக்கும் நிவாரணம்

ஓட்டோ சாரதிகள், பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் சாரதிகள், கட்டுமாணத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நிதியுதவியை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கௌதம் நவ்லக்கா : சில குறிப்புகள்.

(அ. மார்க்ஸ்)

கௌதம் நவ்லக்கா People’s Union for Democractic Rights () அமைப்பில் இருந்து செயல்படும் ஒரு முழு நேர மனித உரிமை மற்றும் சிவில் உரிமைப் போராளி. புகழ்பெற்ற Economic and Political Weekl () இதழில் அவ்வப்போது எழுதி வருபவர். 2018 ஆக 28ல் பிரதமர் நரேந்திரமோடியைக் கொலை செய்ய முயற்சித்தகாக மகாராஷ்டிரப் போலீசால் கைது செய்யப் பட்ட ஐந்து பேர்களில் ஒருவர். எனினும் அவர் அப்போது வீட்டுக் காவலில் வைக்குமாறு ஆணையிடப்பட்டு சிறைவாசம் தவிர்க்கப் பffஅது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலகெங்கும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.

ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியின் பின்னணி என்ன?

(Maniam Shanmugam)
இலங்கையில் ஜே.வி.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) 1971 ஏப்ரல் 05ஆம் திகதி ஆயுதக் கிளர்ச்சி நடந்து இம்மாதம் 05ஆம் திகதியுடன் 49 ஆண்டுகள் – அதாவது ஏறத்தாழ அரை நூற்றாண்டு – முடிவடைந்துவிட்டது. பலத்த உயிர் இழப்புகளுடன் தோல்வியில் முடிவடைந்த அந்தக் கிளர்ச்சி இன்று இலங்கை வரலாற்றின் ஒரு அத்தியாயமாகிவிட்டது.

வியட்நாமின் தவப்புதல்வன்

(Maniam Shanmugam)

நிகுயென் வான் ட்ரோய் (Nguyen Van Troi) 24 வருடங்கள் (1940 – 1964) மட்டுமே வாழ்ந்த ஒரு வியட்நாமிய இளைஞன். அவர் அமெரிக்க – தென் வியட்நாம் கூட்டுப்படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு ஏறத்தாழ 56 ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் இன்றும் வியட்நாமிய மக்களின் நெஞ்சில் ஒரு தேசிய வீரனாக வாழ்ந்து வருகின்றார். வயதில் மிகக் குறைந்தவரான இந்த இளைஞன் அப்படியான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு என்ன காரணம்?

மக்களை மீட்க….உயிர்த்து எழவில்லை ஞாயிறு

(சாகரன்)

இப்பதிவு எந்த மதத்தையோ அல்லது யாரின் கடவுள் நம்பிக்கைகளையோ எள்ளி நகையாடும் நோக்கில் எழுதப்படவில்லை. மாறாக ஒரு யதார்த்த சம கால நிகழ்வுகளை மையப்படுத்தி மக்களின் ஏமாற்றங்களை, இயலாமைகளை அடிப்படையில் சில கேள்விக்களை எழுப்பி விடைகளைத் தேடி நிற்கின்றது.