’ஐக்கியம் பேசுகின்ற யாரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம்’

“புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத் தலைமையனது தமிழ் மக்களுக்கு சரியான பாதையை வகுத்து கொடுக்கும். நாம் சரியான பாதையில் பயணித்து தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்” என, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பல்கலையில் பகிடி வதையும்…. மரணங்களும்….

(சாகரன்)

புதிய மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களில் இணையும் போது அறிமுகத்தை ஏற்படுத்துகின்றோம் புதிய சூழலில் இணைய உதவுகின்றோம் என்று ஆரம்பித்து அது இன்று பகிடி வதையில் வந்து முடிந்திருக்கின்றது. இதன ஆரம்ப ஊற்று இன்றல்ல இதற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதுவும் இந்த சமூகத்திலிருந்தான் இது உருவாகி இருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழக காவாலிகள் பற்றிய நண்பர் முத்து சிவம் அனுப்பியுள்ள மேலதிகத் தகவல்:

கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மரணத்தில் தடம்புரளும் பாரம்பரியம்

(Dr.சி.சிவன்சுதன்)

எமது கலாசாரங்களும் பண்பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால்கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் உடல்,உள ஆரோக்கியத்திற்குக்கூட உறுதுணையாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது.

முதல் கோணல்!

கோத்தபாயா ராஜபக்சா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களில் எடுத்த நடவடிக்கைகள் நாட்டு மக்கள் மத்தியில் அவர்மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலம் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அவர்மீது செய்யப்பட்டிருந்த அவதூறு பிரச்சாரம் கூட ஓரளவுக்கு தமிழ் மக்கள் மத்தியிலும் மறையத்தொடங்கி இருந்தது.

ஒட்டுமொத்த சமூகமும் கவலைப்பட வேண்டும்: அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பேட்டி

கற்றல் மோசம் என்றாலே அரசுப் பள்ளிகளை நோக்கிக் கை காட்டுவது நம் சமூகத்தின் மோசமான இயல்புகளில் ஒன்றாகிவிட்டது இன்று. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் எண்ணிக்கை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களிடத்தில் கற்றல் திறன் மோசம் என்றே வைத்துக்கொள்வோம். அரசுப் பள்ளிகளின் சூழல் தொடர்பில் ஆசிரியர்களிடம் யாரும் பேசுவதில்லை. அங்கே சூழல் என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரிடம் உரையாடியதிலிருந்து…

அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக…

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்


(எம்.எஸ்.எம். ஐயூப்)
சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.

சுதந்திர தினம்

(Maniam Shanmugam)

பெப்ருவரி 04 இலங்கையர்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாள். இதே தினத்தில் 1948 பெப்ருவரி 04ஆம் திகதி இலங்கை பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்றது. நாம் சுதந்திரம் பெற்று நாளையுடன் 72 வருடஙகள் பூர்த்தியாகின்றது.

காணாமல் போனவர்களின் கண்ணீர்

(தமிழ் நேசன்)
ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்பமுதல் இறுதிவரை இனப் படு கொலை, மற்றும் காணாமல் போனவர்கள் என்ற ஒரு பெரும் பட்டியலே உண்டு. அதில் எந்தக் காலத்தில் மட்டும் காணாமல் போனவர்களுக்கு தீர்வு காண விரும்புகிறீர்கள்.