மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பான விசாரணை, கோப்பாய் பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

(“மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !

ஒரு விடயத்தை அறிவு பூர்வமாகவும் அலசலாம் விசமத்தனமாவும் அலசலாம். அந்த வகையில் கடந்த காலங்களில் குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் மலையகத்திலும் வன்னியிலும் போட்டியிட்ட பிரஜைகள் முன்னணி அடைந்த படுதோல்வி அதன் தலைவர் ரங்காவிற்கு ஏற்படுத்திய பாதிப்பு அவரை மது உண்ட மந்தி போல சேட்டை செய்ய தூண்டுவதாய் அவரது மின்னல் நிகழ்ச்சி அமைகிறது.

(“மின்னல் ரங்காவின் யன்னல் பார்வை !” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்கா, கியூபாவுக்கு இடையில் விமான சேவை…?

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ச்சியான வர்த்தக விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு தவிர்க்க முடியாததாகும் என்று பெயரை வெளியிடாத அமெரிக்க மற்றும் கியூப அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும் கியூப அரசுக்கும் அமெரிக்க விமான சேவைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என உறுதி செய்யப்படவில்லை.அமெரிக்கா 54 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஓகஸ்டில் கியூபாவுடன் தூதரக உறவை ஆரம்பித்தது. எனினும் கியூபா மற்றும் அமெரிக்கா உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக கியூபா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா அகற்றிக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. விமான சேவை தொடர்பில் உத்தியோகபூர்வ உடன்பாடொன்று எட்டப்படும் சூழலில் அமெரிக்காவில் இருந்து நாளாந்தம் கியூபாவுக்கு ஒரு டஜன் விமானங்கள் வருகைதர வாய்ப்பு உள்ளது.

சிரிய அகதிகளை உள்வாங்குதல்……

(சாகரன்)

சிரிய அகதிகளை உள்வாங்குதல் என்பதில் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளும், அமெரிக்க முதலாளித்துவ நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதுபோல் தோன்றுகின்றது. மேலெழுந்தவாரியாக பார்த்தால் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவுவது போல் தோன்றினாலும் விமான நிலையங்களில் வந்திறங்கும் சிரிய மக்களையும் அவர்கள் கொண்டு வரும் பொதிகளையும் பார்க்கும் போது இவர்கள்; சிரியாவை விட்டு இடம்பெயர்ந்து இன்னும் ஒரு நாட்டில் வசதியாக வாழ்ந்து விட்டு இன்னும் ஒரு வசதியான நாட்டிற்கு….. அது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயருவது போல் தோற்றம் அளிக்கின்றது. உண்மையான யுத்தத்தினால்; பாதிப்பிற்குள்ளான அகதிகள் ஆண்டாண்டு காலமாக அகதி முகாம்களில் ‘வாட’ மேற்கூறியவர்களை பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு வகை ‘தத்தெடுத்தல்’ விளையாட்டில் இந்த நாடுகளுக்கு விமானங்களில் கொண்டுவந்து இறக்கி தமது மனிதாபிமானங்களை? நிரூபிக்க முயலுவது தெரிகின்றது. இதற்கான பிரச்சார முன்னெடுப்புக்களை இவ் அகதிகள் இந்த நாடுகளுக்கு வந்திறங்க முன்பும், பின்பும் செய்துவரும் வேடிக்கைகள் எம்மால் ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இதில் இன்னொருவிடயமும் அறிய முடிகின்றது, அது இவ் வகையாக பொறுப்பெடுக்கப்படும் அகதிகளும் ஒருவகையில் வடிகட்டப்பட்ட பின்பே தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த வடிகட்டலில் குலமும், மதமும் முக்கிய பங்கை வகிக்கின்றன. யுத்ததில் பாதிக்கப்பட்ட யாவரும் அகதிகள் என்றாலும் யாரை முதன்மைப்படுத்தல் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அகதிகளை உருவாக்கும் யுத்தத்தை நிறுத்துவதே இதற்கான சரியான நிரந்தரத் தீர்வும் ஆகும். அகதிகளை ஏற்பவர்களே யுத்தத்தையும் நடாத்துகின்றனர் என்பது இவர்களின் போலியான மனிதாபிமான முகமூடியை கிளித்தெறியப் போதுமானதாகும்.

‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே…திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு, சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. (“‘திரு சிம்பு அவர்களே… இந்தக் கட்டுரையைப் படிக்க உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’” தொடர்ந்து வாசிக்க…)

த.தே.கூ உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாகினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதற் தடவையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு மாட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில்,

யாழ்ப்பாண மாவட்டம் – மாவை சேனாதிராஜா,
வவுனியா மாவட்டம் – செல்வம் அடைக்கலநாதன்,
கிளிநொச்சி மாவட்டம் – எஸ். ஸ்ரீதரன்
மன்னார் மாவட்டம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டம் – டாக்டர் எஸ். சிவமோகன்
மட்டக்களப்பு மாவட்டம் – ஜி. ஸ்ரீநேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

(“த.தே.கூ உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாகினர்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது இன,மத,குல பேதமின்றி சகலருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

(“வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!

காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, தொழில் துறையிலும் வளர்ந்து வருகிறது. இதனால், அந்நாட்டு தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக அதிகமான புகை வெளியேறுகிறது. மேலும், வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பதிதாலும் அதிக புகை வெளியேறுகிறது. இதனால், அங்கு காற்றில் மாசு பெருகி உள்ளது.

(“மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை!” தொடர்ந்து வாசிக்க…)

30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?

சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது துரத்துகிறது தேவானந்தாவை சூளைமேடு திருநாவுகரசு கொலை வழக்கு. 1986ல் நடந்த சம்பவத்தின் பொலிஸ் தரப்பு சாட்சிகள் 18 பேரும் 2016 ஜனவரி 18ல் நீதிமன்றில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி கூடுதல் செசன் நீதிபதி சாந்தி உத்தரவிட்டுள்ளார். பலத்த வாத பிரதிவாதங்கள் கொண்டதே இந்த வழக்கு என்பது என் வாதம்.

(“30 வருடங்களின் பின் மீண்டும் துளிர்விடும் தேவானந்தா (டக்ளஸ்) வழக்கு விசாரணை?” தொடர்ந்து வாசிக்க…)