வெள்ளம் வடிந்த இடங்களில் வீடுகளில் மீண்டும் புகுவதற்கு முன் கவனத்தில் கொள்ளவும்

1. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக் குழந்தைகள்.
2.நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
3. மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன் (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
4. அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள்.
6. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் போயிருக்கும்.
7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.
8. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய இறைவனுக்கும், அவன் அருளால் உங்களுக்கு உதவிகள் புரிந்த மனிதர்களுக்கும் நன்றி செலுத்துங்கள்.
9. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும், நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும்.

சென்னை ஆட்களைப் பார்த்தால் மிகவும் எரிச்சலாக இருக்கும். சுயநலமாக இருப்பவர்கள் மட்டுமல்ல கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாதவர்கள் என்று. அந்த எண்ணத்தை இன்று பார்த்த சில காட்சிகள் மாற்றிவிட்டது.

1. ஜோய் ஆலுக்காஸ் முன்னால் நாங்கு இளைஞர்கள் முழங்கால் அளவு இருக்கும் தண்ணீரில் இரண்டு , மூன்று நாட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கம் வரும் பைக், கார் இவை சிக்கிக் கொண்டால் தூக்கி உதவிக் கொண்டும் போக்குவரத்தை சரி செய்து கொண்டும் இருந்தார்கள்.

2. வேளச்சேரி -பள்ளிக்கரணை பாலத்துக்கு கீழ் ஒருவர் முட்டி அளவு தண்ணீரில் நின்று ” இந்தப் பக்கம் வராதீங்க பள்ளம் இருக்கு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

3. ஜெயின் சங்கத்தினர் பார்க்கும் இடமெல்லாம் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரமாக நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருந்தார்கள்
.
4. ஃபேஸ்புக்கில் அதிகம் திட்டப்படும் காஞ்சி மடம், தஹ்வீத் ஜமாத் ஆகியோர் பம்பரமாக சுழன்று இண்டு இடுக்குகளில் இருப்பவர்களைத் தேடி உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

5. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் நான் காசு தர்ரேன் போய் உதவுங்க என்று கெஞ்சுகிறார்கள்.

6. என் உறவினர் ஒருவர் மூன்று நாட்களாக சமைத்து பாரீஸ் கார்னர் சுற்றி உள்ள மக்களுக்கு சாப்பாடு , பழங்கள் கொடுத்து வருகிறார்.

7. நண்பன் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் காலை 4 மணிக்கு எழுந்து உயர் அதிகாரிகள், பெண்கள் , குழந்தைகள் என்று கூடி உணவை தயார் செய்து பாக்கெட்டில் அடுக்கி தினமும் சுமார் 1000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்தார்கள்.

8. மீனவர்கள் தங்கள் படகுகளில் வந்து தங்கள் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் இலவசமாக சேவை செய்து இரண்டு மூன்று நாட்கள் மக்களை மீட்டு எடுக்க உதவுகிறார்கள்.

9. போக்குவரத்து காவலர்கள் கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

10. துப்புரவுத் தொழிலாளர்கள் இரவு மழையைப் பற்றிக் கவலைப்படாமல் பம்பரமாக வேலை செய்தார்கள்.

11. உயிர் நண்பன் ஒருவன் 10 பேர் உயிரைக் காப்பாற்றினான். இன்னொருவன் இரண்டு நாட்கள் தூக்கமில்லாமல் தேனீயாக் சுழன்று நிவாரணப் பணிகள் செய்து கொண்டிருக்கிறான்.
மனித நேயம் சுத்தமாக செத்துப் போய்விடவில்லை. சென்னை மக்களுக்கு உதவ தூக்கம், பசி , வேலை , குடும்பம் அனைத்தையும் மறந்து உழைத்தவர்கள் பாதங்களை தொழுகிறேன்.

அய்யா/ அம்மா உங்கள் சேவை ஈடு இணையற்றது.ஊரெல்லாம் இது போன்ற கடவுள்கள் ஏராளமானோர் இருக்காங்க.

By –
நா சாத்தப்பன்

உடனடித் தேவை – வெப்பம்!

நேற்றிரவு முதல் சென்னையில் மீண்டும் மழை தீவிரமடைந்துகொண்டுள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நன்றாக கவனியுங்கள், இந்த வெள்ளம் வடியும் தன்மை கொண்டதல்ல. மேட்டிலிருக்கும் நீர்தான் வடியும். சென்னையின் பல்லாயிரம் குடியிருப்புகள் பள்ளங்களில், நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை. பள்ளத்தில் இருக்கும் நீர் வடியாது, வடியாது!

(“உடனடித் தேவை – வெப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்

 
ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள குறிப்பான பிரச்சினைகள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை பதுளை மற்றும் அப்புத்தளை பிரதேச ஆசிரிய உதவியாளர்கள் முறையே இம்மாதம் 25 மற்றும் 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்களுக்கு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்துரை வழங்க வரவழைக்கப்பட்டிருந்தார். இதன் போது இரு பிரதேசங்களுக்குமான ஆசிரிய உதவியாளர்களும் செயற்குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளதுடன், ஊவா மாகண கல்வி அமைச்சு ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் குறைப்பை செய்வதற்கு எடுத்து வரும் நடவடிக்கையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

(“ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)

சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர்

எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் – வடக்கு முதல்வர்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்புக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு! – புலம்பெயர் இலங்கையர்கள்

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு நடாத்திய ஆதரவு கூட்டங்களில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தங்களிடம் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரின் உதவியும் இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாபா பிறந்த நாள்….. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த நாள் ? நவம்பர் 19 !

வரலாற்றில் நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் நடந்த தினங்கள் எம் நினைவில் எப்போதும் இருக்கும். அந்த வகையில் எனக்கு தெரிந்த ஒரு விடயமும், நான் அறிந்த இரண்டு விடயங்களும் என்றும் என் நினைவில் இருக்கும். எனக்கு தெரிந்த விடயம் 1988 நவம்பர் 19ல் நடந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல். அறிந்த விடயங்களில் ஒன்று நாபா பிறந்த தினம் மற்றது அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம். ஈழ விடுதலை போராட்டத்தில் மறக்க முடியாத நாபா பிறந்த நவம்பர் 19ம் நாளை, மனிதம் பிறந்த நாள் என்பேன்.

(“நாபா பிறந்த நாள்….. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த நாள் ? நவம்பர் 19 !” தொடர்ந்து வாசிக்க…)

அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.

(“அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது….. காலம் மாறிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்

சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.

(“மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்” தொடர்ந்து வாசிக்க…)

பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை

சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

(“பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை” தொடர்ந்து வாசிக்க…)