விஜய் ரீவியின் சுப்பர் சிங்கரும்… இலங்கை தமிழர்களும்….

(சாகரன்)
இலங்கை தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் சம உரிமை பெற்று வாழவில்லை. பேரினவாதம் இனப் படுகொலைகளை கடந்த காலத்தில் நடாத்தி இதன் தொடர்சியாக தனது பேரினவாத சிந்தனையில் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அழிப்பதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றது. இதற்கு எதிரான சாத்வீக போராடங்களும், ஆயுதப் போராடங்களும் நடைபெற்றன. பலன்… கிடைத்தது என்னமோ சட்டரீதியான அதிகாரப் பரவலாக்கலுக்கு 13ம் திருத்தச் சட்டமும் இதன் அடிப்படையில் அமைந்த மாகாண சபையும் தான்.

வெருகல் படுகொலை: ஈழவிடுதலைப் போராட்டதின் அதியுச்ச கொலைக் களம்

(சாகரன்)

கந்தன் கருணை படுகொலை, துணுக்காய் வதை முகாம் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என பல பரிணாமங்களில் அரங்கேறி வந்த படுகொலைகளின் உச்ச கட்டமாக நடந்தேறியதே வெருகல் படுகொலை. ஆனால் முதல் மூன்று படுகொலைகளும் பொதுவெளியில் பேசப்பட்ட அளவிற்கு வெருகல் படு கொலை பேசப்படவில்லை. கூடவே இருந்து பின்பு பிரிந்து சென்ற துரோகத்திற்கு கண்டனம் என்னத்திற்கு..? என்ற நியாயமற்ற பார்வையும், கிழக்கிற்கு கிடைத்த கொலைப் பரிசு என்ற பிரதேசவாதமும், வெருகல் என்ற மறைவான காட்டுப்பகுதியிற்குள் நடைபெற்ற கொலைகள் என்ற சூழலும் இதனை அதிகம் அம்பலப்படுத்தும் நிலையில் இருந்த கருணா பிரிவின் கருணாவிற்கு ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் என்ற பல காரணிகள் இதற்கு காரணமாக இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு இரு தினங்களில் மக்களின் விடிவிற்காக போராட வந்த போராளிகள் சகோதரப்படுகொலை வடிவில் அதிகம் அரகேற்றிய நிகழ்வு இதுதான்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவில்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாம் விலகவில்லை எனவும், சு.க வினர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணமாக​, எதிர்க்கட்சி பொறுப்பை தாம் ஏற்றதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்து மக்களின் மனநிலை… தேர்தல் நெருங்கும் வேளையில்

(Rathan Chandrasekar)
நண்பர் மணா.
பத்திரிகையாளர்.
என் அன்புக்குரிய நண்பர்.
பாசாங்கற்ற மனிதர்.

அவர் பதிவு இது !

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், பதினெட்டு சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தலும் நடக்கவிருக்கிற நிலையில் தென்தமிழகத்திலிருந்து வடதமிழகம் வரை பல பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது நல்லதொரு ஜனநாயக அனுபவம்.

வெருகல் படுகொலையின் வெஞ்சினம்

பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.

ஈழத்தமிழர்களால் பாதிக்கப்படும் பிரெஞ்சு விவசாயிகள்..!

பரிஸ் நகரிலிருந்து சுமார் 30km தொலைவில் அமைந்துள்ள காட்டுமாதா அல்லது வயல் மாதா என்று எம்மவர்களால் அழைக்கப்படும் Chemin Notre-Dame de France (95560 Baillet en France ) தேவாலயம் மத பேதமற்று அனைவரும் சென்று தரிசிக்கும் புனித தலமாகும்.

நினைவில் நிற்கும் நாள்-10.4.2004: புலிகளால் மேற் கொள்ளப் பட்ட வாகரைப் படுகொலையும் பாலியற் கொடுமைகளும்

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

துரியோதன சகோதரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பகிரங்கமான கூட்டத்தின் நடுவே திரவுபதியின் ஆடையை அவிழ்த்து அவளை அவமானம் செய்கிறார்கள். அதைத் தொடர்ந்து மகாபாரதப் போர் வருகிறது. இராவணன் சீதையைக் கடத்திச் சிறைவைத்ததால் இராமாயண யுத்தம் வருகிறது. இவை இதிகாசங்கள்.ஆண்களால் எழுதப் பட்டவை.ஆனாலும் பெண்களைப் பாலியற் கொடுமைகளுக்கு ஆளாக்கினால் அதன் விளைவாக அழிவுகள்,மாற்றங்கள், புதிய சிந்தனைகள் என்பன பிறக்கின்றன என்பது மேற்குறிப்பிட்ட கதைகளிலிருந்து தெரிய வருகின்றன.

சமூக விடுதலைப் போராளி “கண்டகா”

இவர் பெயர் அலா சலா. 22 வயதேயான இளம் பெண். ஒரு “முஸ்லிம் நாடான” சூடானில் மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் சமூக விடுதலைப் போராளி. அங்குள்ள மக்கள் இவரை “கண்டகா” என்று அழைக்கிறார்கள். அது பண்டைய நாகரிக காலத்தை சேர்ந்த நுபிய ராஜ்யத்தில் அரசியின் பெயர்.

விக்கிலீக்ஸ் (WikiLeaks) ஸ்தாபகர் ஜுலியன் அசான்ஞ் (Julian Assange) கைது செய்யபப்ட்டார்.

விக்கிலீக்ஸ் (WikiLeaks) ஸ்தாபகர் ஜுலியன் அசான்ஞ் (Julian Assange) இன்று (11.02.2019) இலண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்திற்குள் நுழைந்து பிரித்தானியாப் பொலிசாரால் கைது செய்யபப்ட்டார்.

வெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்

வெருகல் படுகொலையின் 15 ஆவது நினைவையொட்டி வெருகல் மலை பூங்காவில் இடம் பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சிவ .சந்திரகாந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு செயலாளர் பூ .பிரசாந்தன் அவர்களால் வாசிக்கப்படட உரை.