தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். (“தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?

கையடக்க பூசணி. நம் கட்டைப் பைக்கு அளவெடுத்த சைஸில் ‘குட்டை’ புடலை என இப்போது காய்கறிகளும் அல்ட்ரா மாடர்ன் ஆகிவிட்டன. இதெல்லாம்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என யாரோ சொல்ல, பகீரென்றது நமக்கு. அய்யய்யோ… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் ஆபத்துனு சொல்லித்தானே எதிர்க்குறாங்க. அப்போ நாம ஆபத்தையா சாப்பிடுறோம்? தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான செல்வத்திடம் கேட்டோம்… (“மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)

மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….

மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பான உயிரிழை அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக (A9 வீதியில்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் 2018இற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா.2,00,000.00 ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையானது கடந்த 15.01.2019 தைப்பொங்கலன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. (“மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….” தொடர்ந்து வாசிக்க…)

யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி

(கே. சஞ்சயன்)

இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. (“யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

நாளை ( சனிக்கிழமை) நிகழ்வு – ஈஸ்தாம்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான 1000/= சம்பளக் கோரிக்கைக்கான எமது ஒருமைப்பாடும், அக்கோரிக்கையின் பின்னுள்ள அடிப்படை நியாயங்களுக்கான முன்வைப்புகளும்….

கலந்துரையாடலும் கருத்துக்களும்…

(“நாளை ( சனிக்கிழமை) நிகழ்வு – ஈஸ்தாம்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு நீர் விவகாரம்; முன்மொழிவுகளுக்குப் பரிந்துரை

இரணைமடுவிலிருந்து வீணாகும் 60 சதவீதமான நீரை, யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்வதற்கான திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இரணைமடு நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்றிட்ட அலுவலகத்துக்கு, இன்று (18) திடீர் விஜயம் மேற்கொண்ட அவர், நிலைமைகளை ஆரய்ந்தார். (“இரணைமடு நீர் விவகாரம்; முன்மொழிவுகளுக்குப் பரிந்துரை” தொடர்ந்து வாசிக்க…)

உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்

இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், தமிழ் மொழி பேசும் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. (“உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தத்தை ஒப்பந்த தரப்புகள்கூட நீதிமன்றத்தினூடாக கேள்விக்குட்டுத்த முடியாது

விசேட மேன்றையீடு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கும் போது அதனை நீதிமன்றத்தினூடாக அந்த கூட்டு ஒப்பந்தத்தின் தரப்புகளான தொழில் வழங்குநருக்கோஃ கம்பனிகளுக்கோ அல்லது தொழிலாளர்கள் சார்பாக கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கோ அல்லது நேரடியாக தொழிலாளர்களுக்கோ, நீதிமன்றத்தினூடாக கூட்டு ஒப்பந்தத்தை முடிவுறுத்தவோ கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே அதனை முடிவுறுத்த முடியும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீடு பற்றிய விசாரணையின் போது உயர் நீதிமன்றம் தெரிவித்து அவரின் மனுவை நிராகரித்தது. குறித்த விசேட மேன்முறையீடு மீதான விசாரணை 17-01-2019ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித மல்லகொட மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த காரணம் கூறப்பட்டு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. (“கூட்டு ஒப்பந்தத்தை ஒப்பந்த தரப்புகள்கூட நீதிமன்றத்தினூடாக கேள்விக்குட்டுத்த முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது. (“பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பல்தேசியக் கம்பனிகளால் பறிபோகும் விவசாயம்

”ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய போது அமெரிக்கா என்றொரு நாடே
இருக்கவில்லை. ஏன் அப்படி ஒரு நிலப் பரப்பே நவீன மனிதர்களால்
கண்டறியப்படவில்லை.”
வவுனியாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தமிழருவி சிவகுமாரன்
ஐயா ஆற்றிய உரையில் ஒரு கீற்று இது.
தமிழன் உயர் நிலைகளைக் கண்ட பொற் காலத்தின் போது ஐரோப்பியர்கள்
உன்னதங்களைத் தொடவில்லை.ஆனால் இன்று அப்படியாகவா இருக்கிறோம். (“பல்தேசியக் கம்பனிகளால் பறிபோகும் விவசாயம்” தொடர்ந்து வாசிக்க…)